பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு; 5 பேர் பலி


பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு; 5 பேர் பலி
x
தினத்தந்தி 16 Aug 2019 11:18 AM GMT (Updated: 16 Aug 2019 11:18 AM GMT)

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குவெட்டா மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் 5 பேர் பலியாகி உள்ளனர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டாவின் புறநகரில் உள்ள குச்லாக் பகுதியில் அமைந்துள்ள ஒரு மதரசாவில் குண்டு வெடித்தது. இதில் 5 பேர் பலியாகி  உள்ளனர். குண்டுவெடிப்பின் தன்மை இதுவரை கண்டறியப்படவில்லை. குண்டுவெடிப்பில் காயமடைந்த பலர் அருகில் உள்ள குவெட்டா  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். செமினரியின் சுவர்கள் மற்றும் கூரைக்கு விரிவான சேதத்தை குண்டுவெடிப்பு ஏற்படுத்தியது.

கடந்த நான்கு வாரங்களாக குவெட்டாவில் நிகழ்ந்த நான்காவது குண்டு வெடிப்பு இதுவாகும். ஜூலை 23 ம் தேதி, குவெட்டாவின் கிழக்கு பைபாஸ் பகுதியில் குண்டுவெடிப்பில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 18 பேர் காயமடைந்தனர்.

ஜூலை 30 அன்று, ஒரு போலீஸ் நிலையம் அருகே மற்றொரு தாக்குதல் நடந்தது, அதில் 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அந்த குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றுள்ளது. கடந்த வாரம், குவெட்டாவின் மிஷன் சாலை பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 10 பேர் காயமடைந்தனர்.

Next Story