உலக செய்திகள்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரம் பற்றி ஆலோசனை - பூட்டிய அறைக்குள் நடைபெற்றது + "||" + UN Advocacy on Kashmir issue at Security Council - held in locked room

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரம் பற்றி ஆலோசனை - பூட்டிய அறைக்குள் நடைபெற்றது

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரம் பற்றி ஆலோசனை - பூட்டிய அறைக்குள் நடைபெற்றது
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், காஷ்மீர் விவகாரம் பற்றிய ஆலோசனை கூட்டம் பூட்டிய அறைக்குள் நடைபெற்றது.
நியூயார்க்,

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை இந்திய அரசு நீக்கியது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விவாதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. இதனை சீனாவும் ஆதரித்தது. இந்நிலையில் ரஷியாவின் நிரந்தர பிரதிநிதி டிமிட்ரி பாலியான்ஸ்கி கூறும்போது, இது இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினை. இதுபற்றி அவர்கள்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு என்றார்.


ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அபூர்வ நிகழ்வாக பூட்டிய அறைக்குள் காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசிக்க முடிவெடுத்தது. பாகிஸ்தான் தங்கள் பிரதிநிதியை கூட்டத்தில் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால் அதனை ஏற்க ஐ.நா. மறுத்துவிட்டது. இந்திய நேரப்படி நேற்று இரவு 7.30 மணிக்கு பூட்டிய அறைக்குள் இதுபற்றி விவாதிக்கப்பட்டது. இதில் இந்தியா, பாகிஸ்தான் தவிர 5 நிரந்தர உறுப்பினர்களும், 10 நிரந்தரமற்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இது ஒரு வழக்கமான ஆலோசனை தான், இதில் வழக்கம்போல தீர்ப்பு எதுவும் அறிவிக்கப்படாது என்று ஐ.நா. வட்டாரம் தெரிவித்தது.