உலகளாவிய நிதி கண்காணிப்புக்குழு பயங்கரவாத தடுப்பு பட்டியலில் பாகிஸ்தான்


உலகளாவிய நிதி கண்காணிப்புக்குழு பயங்கரவாத தடுப்பு பட்டியலில் பாகிஸ்தான்
x
தினத்தந்தி 23 Aug 2019 8:43 AM GMT (Updated: 23 Aug 2019 8:43 AM GMT)

உலகளாவிய நிதி கண்காணிப்புக்குழு ஆசிய-பசிபிக் பிரிவின் பயங்கரவாத தடுப்பு பட்டியலில் பாகிஸ்தான் இடம் பெற்று உள்ளது.

புதுடெல்லி,

உலகளாவிய தரத்தை பூர்த்தி செய்யத் தவறியதற்காக "உலகளாவிய நிதி கண்காணிப்புக் குழு ஆசிய-பசிபிக் பிரிவு பயங்கரவாத மேம்பட்ட தடுப்புப்பட்டியலில்" பாகிஸ்தானை சேர்த்துள்ளதாக அதிகாரிகள் இன்று  தெரிவித்தனர்.

நிதி நடவடிக்கை பணிக்குழுவின் ஆசிய-பசிபிக் குழு பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவி தொடர்பான 40 இணக்க அளவுருக்களில் 32க்கு பாகிஸ்தான் இணங்கவில்லை என்பதைக் கண்டறிந்துள்ளது. பயங்கரவாத நிதியளிப்பு மற்றும் பணமோசடி ஆகியவற்றின் 11 அளவுருக்கள் மீது, பாகிஸ்தான் 10 இல் குறைந்ததாக கூறப்பட்டு உள்ளது. 

இந்த ஆண்டு ஜூன் மாதம் கண்காணிப்புக்குழு , அக்டோபர் மாதத்திற்குள் பயங்கரவாத நிதியுதவி செய்யப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும் அல்லது விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தானுக்கு ஒரு வலுவான எச்சரிக்கையை விடுத்திருந்தது. 

அக்டோபர் மாதத்திற்குள் ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட  பயங்கரவாதிகளுக்கு எதிரான ஒரு "செயல் திட்டத்தை" நிறைவேற்றாவிட்டால் நாடு தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படும் என்று அது கூறியதாக இந்திய தூதரக  வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் அமெரிக்காவின் உலகளாவிய பயங்கரவாதியாக பட்டியலிடப்பட்டதைத் தொடர்ந்து பயங்கரவாத நிதிகளை நிறுத்துவதில் சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யத் தவறும் நாடுகளின் தடுப்புப்பட்டியலில் பாகிஸ்தானை சேர்க்குமாறு இந்தியா கடந்த காலங்களில்  நிதி கண்காணிப்புக் குழுவிடம் வலியுறுத்தியது. 

Next Story