நைஜீரியாவில் பயணிகள் பஸ் மற்றும் சரக்கு லாரி நேருக்கு நேர் மோதி விபத்து - 17 பேர் பலி


நைஜீரியாவில் பயணிகள் பஸ் மற்றும் சரக்கு லாரி நேருக்கு நேர் மோதி விபத்து - 17 பேர் பலி
x
தினத்தந்தி 23 Aug 2019 10:00 PM GMT (Updated: 23 Aug 2019 8:59 PM GMT)

நைஜீரியாவின் குவ்ரா மாகாணத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பஸ் மற்றும் சரக்கு லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 17 பேர் பலியாகினர்.

* வடகொரியா, அணுஆயுத சோதனைகளை கைவிடும்வரை அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகள் தொடரும் என அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ கூறினார். இதற்கு பதில் அளித்துள்ள வடகொரிய வெளியுறவு மந்திரி ரி யாங் ஹோ, “பொருளாதாரத் தடையால் மாற்றம் ஏற்படும் என்று அமெரிக்கா நினைக்கும் கனவை வடகொரியா சிதைக்கும். பொருளாதாரத் தடைகளை தொடர்ந்தால் வடகொரியா எதிர்காலத்திலும் அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும்” என்றார்.

* பாகிஸ்தான் மற்றும் சீனாவில் சிறுபான்மையினருக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் அடக்குமுறை உள்ளிட்டவை அதிகரித்து வருவது தொடர்பாக அந்நாடுகளுக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

* நைஜீரியாவின் குவ்ரா மாகாணத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பஸ் மற்றும் சரக்கு லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

* ஆப்கானிஸ்தானின் நங்கார்ஹர் மாகாணத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடி மீது, பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அதனை தொடர்ந்து போலீசார் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இந்த மோதலில் 3 போலீசாரும், 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

Next Story