இழப்பதற்கு எதுவுமில்லை ; ஹாங்காங் போராட்டகாரர்கள்


இழப்பதற்கு எதுவுமில்லை ; ஹாங்காங் போராட்டகாரர்கள்
x
தினத்தந்தி 28 Aug 2019 3:07 AM GMT (Updated: 28 Aug 2019 3:07 AM GMT)

ஹாங்காங் போராட்டத்தில் 'இழப்பதற்கு எதுவுமில்லை', ’நாங்கள் எரிந்தால் நீங்களும் எரிவீர்கள்’ மற்றும் ‘ஹாங்காங் சீனா இல்லை’ என போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

ஹாங்காங், 

ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் ஜனநாயக ஆதரவாளர்கள் லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து, ஹாங்காங் நிர்வாகம், கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதா நிறுத்திவைக்கப்படுவதாக அறிவித்தது.ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத போராட்டக்காரர்கள் மசோதாவை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அமைதியான முறையிலேயே போராட்டங்கள் நடந்த போதும் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தொடர் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி ஹாங்காங் கலவர பூமியாக மாறியது. 

ஆனால் ஆகஸ்ட் 24-ம் தேதி, நேற்று முன்தினம் நடைபெற்ற போராட்டத்தில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மாபெரும் வன்முறை வெடித்தது. இதையடுத்து , மக்கள் தொகை அதிகம் உள்ள குன்டோங் நகரில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதனால் கலவர பூமியானது ஹாங்காங்.

இதற்கிடையில் போராட்டத்தின் போது, வன்முறையில் ஈடுபட்டதாக கூறி, 10 பெண்கள் உள்பட 29 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, தொடர்ந்து 79 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது.

இதையடுத்து, போராட்டக்காரர்கள் 'இழப்பதற்கு எதுவுமில்லை', ’நாங்கள் எரிந்தால் நீங்களும் எரிவீர்கள்’ மற்றும் ‘ஹாங்காங் சீனா இல்லை’ என போராட்டக்காரர்கள்  முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். 

இதைபற்றி ஊடகங்களுக்கு பதிலளித்த போராட்டகாரர்கள், ”நாங்கள் இனி இழப்பதற்கு எங்களிடம் எதுவும் இல்லை எனவும், இதை நாங்கள் வாழ்வா? சாவா? போராட்டமாக கருதுகிறோம்.  இது ஹாங்காங், சீனா இல்லை. நாங்கள் பாதிக்கப்பட்டால் நீங்களும் பாதிப்படைய நேரிடும். நாங்கள் இந்த போராட்டத்தை இப்போது கைவிட்டால் சர்வாதிகார அரசாங்கமே தலை தூக்கும்” என தங்களது கருத்துகளை வாசகங்கள் மூலம் தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.


Next Story