உலக செய்திகள்

காங்கோ நாட்டில் ரெயில் தடம் புரண்டதில் 50 பேர் பலி + "||" + Congo: At least 50 killed after train derails

காங்கோ நாட்டில் ரெயில் தடம் புரண்டதில் 50 பேர் பலி

காங்கோ நாட்டில் ரெயில் தடம் புரண்டதில் 50 பேர் பலி
காங்கோ நாட்டில் ரெயில் தடம் புரண்ட விபத்தில் சிக்கி 50 பேர் பலியாயினர்.
கின்ஷசா,

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் டான்கான்யிகா மாகாணத்தின் தலைநகர் காலேமீயில் இருந்து பயணிகள் ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது.

இந்த ரெயில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணிக்கு மாயிபாரிடி நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது, சற்றும் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது.


ரெயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் பயணிகள் 50 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.