மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதல் - ராணுவ வீரர்கள் 6 பேர் பலி


மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதல் - ராணுவ வீரர்கள் 6 பேர் பலி
x
தினத்தந்தி 16 Sep 2019 10:19 PM GMT (Updated: 16 Sep 2019 10:19 PM GMT)

மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 6 பேர் பலியாயினர்.


* ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள பாரா மாகாணத்தின் தலைநகர் பாராவில் சாலையோரம் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 5 பேர் உடல் சிதறி உயிர் இழந்தனர்.

* பக்ரைன் நாட்டின் பட்டத்து இளவரசர் சல்மான் பின் ஹமத் அல் கலிபா அமெரிக்கா சென்று உள்ளார். அங்கு அவர் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்பை சந்தித்து, இரு தரப்பு உறவை பலப்படுத்துவது குறித்தும், ஈரான் விவகாரம் தொடர்பாகவும் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

* மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் லேக் சாத் பிராந்தியத்தில் உள்ள ராணுவ சாவடி மீது போகோ ஹரம் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 9 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

* ஆப்கானிஸ்தானின் படாக்‌ஷான் மாகாணத்தில் தலீபான் பயங்கரவாத இயக்கத்தின் தளபதி உள்பட 24 பயங்கரவாதிகள் ராணுவத்தினரிடம் சரண் அடைந்தனர்.

* ரஷியா-சீனா இடையிலான 24-வது சந்திப்பு ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக சீன பிரதமர் லி கெகியாங், தனது மனைவி செங் ஹாங் மற்றும் வெளியுறவு மந்திரி வாங் யி ஆகியோருடன் ரஷியா புறப்பட்டு சென்றார்.


Next Story