உலக செய்திகள்

ஏமனில் பஸ்சில் மறைத்து வைக்கப்பட்ட குண்டு வெடித்து சிதறியதில் 5 பேர் உயிர் இழப்பு - 20 பேர் பலத்த காயம் + "||" + Five killed in bomb explosion in Yemen - 20 people injured

ஏமனில் பஸ்சில் மறைத்து வைக்கப்பட்ட குண்டு வெடித்து சிதறியதில் 5 பேர் உயிர் இழப்பு - 20 பேர் பலத்த காயம்

ஏமனில் பஸ்சில் மறைத்து வைக்கப்பட்ட குண்டு வெடித்து சிதறியதில் 5 பேர் உயிர் இழப்பு - 20 பேர் பலத்த காயம்
ஏமனில் பஸ்சில் மறைத்து வைக்கப்பட்ட குண்டு வெடித்து சிதறியதில் 5 பேர் உயிர் இழந்தனர். மேலும் 20 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

* சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள அக்ரபா நகரின் வான் எல்லையில் அத்துமீறி நுழைந்த ஆளில்லா விமானத்தை சிரியா ராணுவம் சுட்டு வீழ்த்தியது. முன்னதாக கடந்த திங்கட்கிழமை டமாஸ்கஸ் நகரில் இஸ்ரேலின் ஆளில்லா விமானங்கள் நடத்திய வான்தாக்குதலில் 10 வீரர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.


* ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹராமவுட் மாகாணத்தில் பஸ்சில் மறைத்து வைக்கப்பட்ட குண்டு வெடித்து சிதறியதில் 5 பேர் உயிர் இழந்தனர். மேலும் 20 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

* அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் சிறிய ரக விமானம் ஒன்று கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானி சம்பவ இடத்திலேயே பலியானார்.

* சவுதி அரேபியாவில் தஞ்சமடைந்திருந்த, துனிசியாவின் முன்னாள் அதிபர் ஜினே அல் அபிதின் பென் அலி உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் கராச்சி பங்குச்சந்தை அலுவலக தாக்குதல்: உயிரிழப்பு 10 ஆக உயர்வு
பாகிஸ்தான் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
2. ஏமன் இராணுவத் தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் 7 பேர் பலி
ஏமன் இராணுவத் தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 7 பேர் பலியாகி உள்ளனர்.
3. கர்நாடகத்தில் நாளை முழு ஊரடங்கு - பஸ், ரெயில், ஆட்டோக்கள் ஓடாது
கர்நாடகத்தில் நாளை(ஞாயிற்றுக் கிழமை) முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படு கிறது. இதனால் பால், மருந்தகம் தவிர அனைத்து கடைகளும் மூடப்படுகிறது. மேலும் பஸ், ரெயில், ஆட்டோக் கள் ஓடாது.
4. ஆப்கானிஸ்தானில் போலீஸ் அதிகாரியின் இறுதி சடங்கில் குண்டு வெடிப்பு - 40 பேர் உடல் சிதறி பலி
ஆப்கானிஸ்தானில் போலீஸ் அதிகாரியின் இறுதி சடங்கின்போது நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 40 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
5. ஏமனில் ஹவுதி புரட்சிபடையின் முக்கிய தளபதி கொலை
ஏமனில் ஈரானிய ஆதரவுப்பெற்ற ஹவுதி புரட்சிபடையின் முக்கிய தளபதி முகமது அல் ஹம்ரான் நேற்று கொல்லப்பட்டார் என அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.