காஷ்மீர் பிரச்சினைக்கு மோடியும், இம்ரான்கானும் பேசி தீர்வுகாண வேண்டும் ; டிரம்ப் கருத்து


காஷ்மீர் பிரச்சினைக்கு மோடியும், இம்ரான்கானும் பேசி தீர்வுகாண வேண்டும் ; டிரம்ப் கருத்து
x
தினத்தந்தி 24 Sep 2019 11:45 PM GMT (Updated: 24 Sep 2019 10:20 PM GMT)

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், இந்திய பிரதமர் மோடியும் சந்தித்து பேசியபின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது டிரம்ப் கூறியதாவது:-

நியூயார்க், 

மோடியும், இம்ரான்கானும் பேசி காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகண்டால் மகிழ்ச்சியாக இருக்கும். மோடி இதனை கவனித்துக்கொள்வார் என்பது எனக்கு தெரியும். இருதரப்பும் ஒப்புக்கொண்டால் மட்டுமே நான் மத்தியஸ்தம் செய்ய தயார். உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்திய தேர்தல் சரியான தலைமையை தேர்ந்தெடுத்துள்ளது. மோடி இந்தியாவின் தந்தை போன்றவர்.

இவ்வாறு டிரம்ப் கூறினார்.

பிரதமர் மோடி கூறும்போது, “அமெரிக்காவும், இந்தியாவும் ஒன்றிணைந்து செயல்படுவது உலக நாடுகளுக்கு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கும்” என்றார்.

Next Story