ஜம்மு காஷ்மீர் விவகாரம்: சர்வதேச அரங்கில் எடுபடவில்லை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அதிருப்தி


ஜம்மு காஷ்மீர் விவகாரம்: சர்வதேச அரங்கில் எடுபடவில்லை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அதிருப்தி
x
தினத்தந்தி 25 Sep 2019 8:03 AM GMT (Updated: 25 Sep 2019 9:45 AM GMT)

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக எப்படி பிரச்சாரம் செய்தாலும் சர்வதேச அரங்கில் எடுபடவில்லையே என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அதிருப்தி அடைந்துள்ளார்.

நியூயார்க்

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவை ரத்து செய்த மத்திய அரசு, அம்மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் அறிவிப்பை வெளியிட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் அரசு, காஷ்மீர் தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையைக் கண்டித்து உலக நாடுகள் மத்தியில் பல்வேறு வகையில் பிரச்சாரம் செய்தது.

காஷ்மீர் பக்கம் சர்வதேச நாடுகளின் கவனம் திரும்பும் என்று எண்ணி,  இம்ரான்கான் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூட, காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்ற வார்த்தையை மட்டுமே உதிர்த்தார்.

முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது குறித்து வெளிப்படையாகவே பேசிய இம்ரான்கான், பிரதமர் நரேந்திரமோடிக்கு அழுத்தம் கொடுக்காத காரணத்தால் சர்வதேச நாடுகள் மீது சிறிது அதிருப்தி அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

போரைத் தவிர்த்து வேறு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்து கொண்டிருப்பதாகவும் இம்ரான்கான் கூறினார். இந்திய நாடு 100 கோடி மக்கள் கொண்ட சந்தை என்பதால் உலக நாடுகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் இம்ரான்கான் சாடினார்.

Next Story