சவுதி அரேபியாவுக்கு 200 வீரர்களுடன் போர் தளவாடங்கள் அனுப்பப்படும் : அமெரிக்க ராணுவம் தகவல்


சவுதி அரேபியாவுக்கு 200 வீரர்களுடன் போர் தளவாடங்கள் அனுப்பப்படும்  : அமெரிக்க ராணுவம் தகவல்
x
தினத்தந்தி 27 Sep 2019 11:30 PM GMT (Updated: 27 Sep 2019 10:04 PM GMT)

சவுதி அரேபியா தலைநகர் ரியாத் அருகே உள்ள அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் எண்ணெய் வயல் மீது கடந்த 14-ந்தேதி ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தின.

வாஷிங்டன், 

ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றபோதும், தாக்குதலின் பின்னால் ஈரான் இருப்பதாக அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் குற்றம் சாட்டி வருகின்றன. இதனால் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் நீடிக்கிறது.

இந்த நிலையில் தற்காப்பு நடவடிக்கைக்காக சவுதி அரேபியாவுக்கு 200 ராணுவ வீரர்களையும், பேட்ரியாட் ஏவுகணைகள் உள்ளிட்ட போர் தளவாடங்களையும் அனுப்ப உள்ளதாக அமெரிக்க ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story