உங்கள் பெயர் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல வேண்டுமா? -நாசா உங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்குகிறது


உங்கள் பெயர் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல வேண்டுமா?  -நாசா உங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்குகிறது
x
தினத்தந்தி 28 Sep 2019 8:27 AM GMT (Updated: 28 Sep 2019 10:25 AM GMT)

உங்கள் பெயர் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல வேண்டுமா? இதற்காக நாசா உங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கி உள்ளது.

வாஷிங்டன்

செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் மைக்ரோசிப்பில் பொறிக்க, நாசா உலகெங்கிலும் உள்ள மக்களை தங்கள் பெயர்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க  அழைப்பு விடுத்து உள்ளது. மைக்ரோசிப் செவ்வாய் கிரகம் 2020 ரோவரில் வைக்கப்படும்.

பெயர்களை கீழகண்ட  வலைப்பக்கத்தில் செப்டம்பர் 30-க்கு முன் சமர்ப்பிக்கலாம்.

https://mars.nasa.gov/participate/send-your-name/mars2020

சமர்ப்பிக்கப்பட்ட பெயர்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு, நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் உள்ள மைக்ரோ டிவைசஸ் ஆய்வகம் எலக்ட்ரான் கதிரை பயன்படுத்தி சிலிக்கான் சிப்பில் பெயர்களைக் பதிவு செய்யும்.

இதுவரை 98 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் பெயர்களை சமர்ப்பித்துள்ளனர். ரோவர் 2020 ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது, இது பிப்ரவரி 2021க்குள் செவ்வாய் கிரகத்தைத் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய் கிரக 2020 பணி சிவப்பு கிரகத்தின் காலநிலை, புவியியல் ஆகியவற்றை ஆய்வு செய்வதோடு மாதிரிகள் சேகரித்து பூமிக்கு அனுப்புவதையும்  நோக்கமாகக் கொண்டுள்ளது. ரோவர் நுண்ணுயிர் வாழ்க்கையையும் தேடும்.

வாஷிங்டனில் உள்ள நாசாவின் அறிவியல் மிஷன் இயக்குநகரத்தின் இணை நிர்வாகி தாமஸ் சுர்பூச்சென் கூறும்போது, இந்த வரலாற்று  சாதனை செவ்வாய் கிரக பயணத்தை தொடங்க நாங்கள் தயாராகி வருகிற நிலையில் , இந்த ஆய்வு பயணத்தில் அனைவரும் பங்குபெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எங்கள் அண்டை கிரகம் பற்றிய ஆழமான கேள்விகளுக்கும், வாழ்க்கையின் தோற்றம் பற்றியும் கூட இந்த பயணத்தை மேற்கொள்வதால் நாசாவுக்கு இது ஒரு உற்சாகமான நேரம் என கூறினார்.

நாசாவின் இன்சைட் மிஷனில் செவ்வாய் கிரகத்திற்கு 20 லட்சத்திற்கும்  அதிகமான பெயர்கள் அனுப்பப்பட்டன, மேலும் நாசாவின் பார்க்கர் சூரிய ஆய்வில் சுமார் 11 லட்சம்  பெயர்கள் அனுப்பப்பட்டன.



Next Story