மோடியை இந்திய ஜனாதிபதி என கூறிய இம்ரான்கான்


மோடியை இந்திய ஜனாதிபதி என கூறிய இம்ரான்கான்
x
தினத்தந்தி 28 Sep 2019 11:09 AM GMT (Updated: 28 Sep 2019 11:09 AM GMT)

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஐ.நா.வில் ஆற்றிய உரையின் போது மோடியை இந்திய குடியரசுத் தலைவர் என தவறாகக் கூறினார்.

நியூயார்க்

கிரிக்கெட் வீரராக இருந்து பாகிஸ்தான் பிரதமரான இம்ரான்கான் ஐ.நா.வில் தனது முதல் உரையை நேற்று நிகழ்த்தினார். 50 நிமிடம் நிகழ்த்திய உரையின் பெரும்பகுதி இந்தியாவுக்கு எதிராகவே அமைந்திருந்தது.

அவர் ஆற்றிய உரையில் இந்தியப் பிரதமர் என குறிப்பிடுவதற்கு பதில் மோடியை இந்திய ஜனாதிபதி மோடி என தவறாகக் குறிப்பிட்டார்.

ஏற்கெனவே ஈரானில் நிகழ்த்திய உரை ஒன்றில் ஜெர்மனி - பிரான்ஸ் எல்லைப் பகுதி எனக் குறிப்பிடுவதற்கு பதில், ஜெர்மனியும் ஜப்பானும் எல்லையைப் பகிர்ந்து கொள்வதாக இம்ரான்கான் குறிப்பிட்டது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவின் பிரதமரை, ஜனாதிபதி மோடி எனக் கூறி இம்ரான்கான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Next Story