உலக செய்திகள்

ஊழல் ஒழிப்பில் சீன அதிபரை பின்பற்றி 500 பேரை சிறையில் தள்ளுவேன் - இம்ரான் கான் + "||" + 'Wish I Could Follow Prez Xi's Example and Put 500 Corrupt People in Pakistan in Jail', Says Imran Khan

ஊழல் ஒழிப்பில் சீன அதிபரை பின்பற்றி 500 பேரை சிறையில் தள்ளுவேன் - இம்ரான் கான்

ஊழல் ஒழிப்பில் சீன அதிபரை பின்பற்றி 500 பேரை சிறையில் தள்ளுவேன் - இம்ரான் கான்
ஊழல் ஒழிப்பில் சீன அதிபரை பின்பற்றி 500 பேரை சிறையில் தள்ளுவேன் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

பீஜிங், 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 2 நாள் பயணமாக சீனாவுக்கு சென்றுள்ளார். சர்வதேச வர்த்தக முன்னேற்றத்துக்கான சீன கவுன்சில் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அங்கு தொழிலதிபர்களிடையே அவர் பேசியதாவது:-

சீன அதிபர் ஜின்பிங்கின் மிகப்பெரிய போர், ஊழலுக்கு எதிரானது ஆகும். அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது, ஊழலை எப்படி ஒடுக்கலாம் என்பதுதான். அவர் கடந்த 5 ஆண்டுகளில், மந்திரி அந்தஸ்துள்ள 400 பேரை ஊழல் குற்றத்துக்காக சிறையில் தள்ளி இருப்பதாக கேள்விப்பட்டேன்,

அவரை முன்மாதிரியாக கொண்டு, பாகிஸ்தானில் சுமார் 500 ஊழல்வாதிகளை நான் சிறையில் தள்ள விரும்புகிறேன். அந்த அளவுக்கு பாகிஸ்தானின் முன்னேற்றத்துக்கு ஊழல் ஒரு முட்டுக்கட்டையாக இருக்கிறது. அதே சமயம், பாகிஸ்தானில் கோர்ட்டு நடவடிக்கைகள் மந்தகதியில் உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மோடியை இந்திய ஜனாதிபதி என கூறிய இம்ரான்கான்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஐ.நா.வில் ஆற்றிய உரையின் போது மோடியை இந்திய குடியரசுத் தலைவர் என தவறாகக் கூறினார்.
2. இம்ரான்கான் சென்ற விமானத்தில் கோளாறு: மீண்டும் நியூயார்க் திரும்பினார்
இம்ரான்கான் சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் நியூயார்க் நகரத்திற்கே திரும்பினார்.
3. ஜம்மு காஷ்மீர் விவகாரம்: சர்வதேச அரங்கில் எடுபடவில்லை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அதிருப்தி
ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக எப்படி பிரச்சாரம் செய்தாலும் சர்வதேச அரங்கில் எடுபடவில்லையே என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அதிருப்தி அடைந்துள்ளார்.
4. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்
போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் என்று முசாபராபாத் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் இம்ரான் கான் பேசினார்.
5. 58 நாடுகள் ஆதரவு என தெரிவித்து ட்விட்டரில் கேலி, கிண்டல்களுக்கு ஆளான இம்ரான் கான்
ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் 58 நாடுகள் ஆதரவு தெரிவித்தன என தெரிவித்துள்ள இம்ரான் கான் ட்விட்டரில் கேலி, கிண்டல்களுக்கு ஆளாகி உள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...