உலக செய்திகள்

பாகிஸ்தான் ஹபீஸ் சயீத் உள்பட தீவிரவாதிகள் மீது வழக்கு தொடர வேண்டும் -அமெரிக்கா + "||" + Pak Must Prosecute 4 Arrested LeT Terrorists Along With Hafiz Saeed: US

பாகிஸ்தான் ஹபீஸ் சயீத் உள்பட தீவிரவாதிகள் மீது வழக்கு தொடர வேண்டும் -அமெரிக்கா

பாகிஸ்தான் ஹபீஸ் சயீத் உள்பட தீவிரவாதிகள் மீது வழக்கு தொடர வேண்டும் -அமெரிக்கா
பாகிஸ்தான் ஹபீஸ் சயீத் உள்பட தீவிரவாதிகள் மீது வழக்கு தொடர வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பணியகத்தின் தலைவர் ஆலிஸ் வெல்ஸ் கூறி உள்ளார்.
வாஷிங்டன்:

பாகிஸ்தான் அதன் மண்ணில் பயங்கரவாத குழுக்கள் செயல்படுவதை தடுக்க வேண்டும். லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மற்றும் தலைவர் ஹபீஸ்  சயீத் மீது வழக்கு தொடர வேண்டும் என நிதி நடவடிக்கை பணிக்குழுவின் முக்கியமான முடிவுக்கு முன்னதாக அமெரிக்கா கூறியுள்ளது.

பாகிஸ்தானின் சட்ட அமலாக்க முகமை கடந்த வியாழக்கிழமை பயங்கரவாத நிதியுதவி குற்றச்சாட்டில் தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா / ஜமாத்-உத்-தவாவின் முதல் நான்கு தலைவர்களை கைது செய்தது. கைது செய்யப்பட்ட முதல் நான்கு பயங்கரவாதிகள் பேராசிரியர் ஜாபர் இக்பால், யஹ்யா அஜீஸ், முகமது அஷ்ரப் மற்றும் அப்துல் சலாம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த கைதை அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பணியகத்தின் தலைவர் ஆலிஸ் வெல்ஸ் வரவேற்று உள்ளார்.

பிரதமர் இம்ரான்கான் கூறியது போல், பாகிஸ்தான், தனது சொந்த எதிர்காலத்திற்காக, தீவிரவாத குழுக்கள் தனது மண்ணில் செயல்படுவதைத் தடுக்க வேண்டும். பாகிஸ்தானில் லஷ்கர் இ தொய்பாவின் 4  தலைவர்களை கைது செய்த செய்தியை நாங்கள் வரவேற்கிறோம். இந்த நபர்கள் லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத் உடன் வழக்குத் தொடருவதற்கு  தகுதியானவர்கள் என கூறி உள்ளார்.

பாகிஸ்தான் அதன் மண்ணிலிருந்து செயல்படும் பயங்கரவாதிகளை  சுதந்திரமாக செயல்பட விட்ட வரலாறு உள்ளது. பாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் வைப்பது குறித்து  நிதி நடவடிக்கை பணிக்குழு நடவடிக்கை எடுக்க உள்ள நிலையில் பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது.

பாகிஸ்தானின் செயல்திறனைப் பற்றிய தற்போதைய மதிப்பாய்வு மூலம்  பாகிஸ்தான் கறுப்பு பட்டியலில் இருக்கிறதா அல்லது கருப்பு பட்டியலில் இருந்து எடுக்கப்படுமா? என்பது  தீர்மானிக்கப்படும்.

பாரீஸை தலைமையிடமாக கொண்ட நிதி கண்காணிப்புக் குழுவின் கறுப்பு பட்டியலில் பாகிஸ்தான் இடம்பிடித்தது. 2019 அக்டோபருக்குள் பாகிஸ்தான்  மண்ணில் செயல்படும் தீவிரவாத குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் நிதி அளிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் இந்த செயல் திட்டத்தை  நிறைவு செய்வதற்கான காலக்கெடு வழங்கப்பட்டது.

ஈரான் மற்றும் வட கொரியாவும் நிதி கண்காணிப்புக் குழுவின் கறுப்புப் பட்டியலில் இடம் பெறும் அபாயத்தை எதிர்கொள்ளும்.

தொடர்புடைய செய்திகள்

1. சிகிச்சைக்காக நவாஸ் ஷெரீப் லண்டன் செல்ல பாகிஸ்தான் அரசு அனுமதி
மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்கும் வகையில், வெளிநாடு செல்ல தடை விதிக்கும் பட்டியலில் இருந்து நவாஸ் ஷெரீப் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
2. கடைசி 20 ஓவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை பந்தாடியது ஆஸ்திரேலியா
பெர்த்தில் நேற்று நடந்த கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது.
3. நவாஸ் ஷெரீப் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அவருக்கு வீட்டில் வைத்து தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானை ஆஸ்திரேலியா அணி வீழ்த்தியது. அந்த அணி வீரர் ஸ்டீவன் சுமித் 80 ரன்கள் விளாசினார்.
5. முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா ஆட்டம் மழையால் பாதியில் ரத்து
முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.