உலக செய்திகள்

இந்தியா, சீனா எங்களை புறக்கணிக்கிறது அவற்றை வளரும் நாடுகளாக நாங்கள் கருதவில்லை -டொனால்ட் டிரம்ப் + "||" + India China ripping us off we dont consider them as developing nations- Donald Trump

இந்தியா, சீனா எங்களை புறக்கணிக்கிறது அவற்றை வளரும் நாடுகளாக நாங்கள் கருதவில்லை -டொனால்ட் டிரம்ப்

இந்தியா, சீனா எங்களை புறக்கணிக்கிறது அவற்றை வளரும் நாடுகளாக நாங்கள் கருதவில்லை -டொனால்ட் டிரம்ப்
இந்தியா, சீனா எங்களை புறக்கணிக்கிறது அவற்றை வளரும் நாடுகளாக நாங்கள் கருதவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறினார்.
வாஷிங்டன், 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்  கூறியதாவது:-

உலக வர்த்தக அமைப்பின் கூற்றை இருவரும் "சாதகமாக" பயன்படுத்திக் கொண்டிருப்பதால் இந்தியாவும் சீனாவும் இனி "வளரும் நாடுகள்" அல்ல.

உலக வர்த்தக அமைப்பு ஒரு உண்மையான அமைப்புதானா... இந்தியா மற்றும் சீனாவை வளரும் நாடுகளாக கருத வேண்டாம் என்று வலியுறுத்தி எனது  நிர்வாகம் உலக வர்த்தக அமைப்புக்கு (WTO) ஒரு கடிதம் எழுதியுள்ளது.

அவர்கள் சீனாவை வளரும் நாடாக கருதுகிறார்கள். இந்தியாவை ஒரு வளரும் தேசமாக நாங்கள் கருதவில்லை, ஏனென்றால் அவர்கள் எங்களைத் புறக்கணிக்கிறார்கள் என கூறினார்.

அமெரிக்காவும் சீனாவும் தற்போது வர்த்தக போரில்  ஈடுபட்டுள்ள நிலையில் டிரம்பின் இந்த அறிக்கை வந்துள்ளது. அமெரிக்க தயாரிப்புகளுக்கு "மிக உயர்ந்த" வரிகளை விதித்ததற்காக டிரம்ப் இந்தியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்தியாவை "வரி ராஜா " என்று வர்ணித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் : ஜப்பானில் மன்னர் பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஜப்பானில் மன்னர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
2. டிரம்ப் இந்திய வருகைக்கான ஏற்பாடுகள் அடிமை மன நிலையை காட்டுகிறது ; சிவசேனா பாய்ச்சல்
டிரம்ப் இந்திய வருகைக்கான ஏற்பாடுகள் இந்தியர்களின் அடிமை மன நிலையை காட்டுவதாக சிவசேனா விமர்சித்துள்ளது.
3. கொரோனா வைரஸ் பாதிப்பு : சீனாவில் மேலும் 139 பேர் பலி
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மேலும் 139 பலியாகியுள்ளனர்.
4. கொடூர கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற சீனா புதிய திட்டம்
அருகில் இருப்பவருக்கு நோய் பாதிப்பு இருக்கா? என்பதை கண்டறிய புதிய மொபைல் ஆப் ஒன்றை சீன் அரசு வெளியிட உள்ளது.
5. பெட்ரோல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.