அதிக வேலையின்மை அரபு நாடுகளில் சமூக பதட்டங்களை மோசமாக்குகிறது - சர்வதேச நாணய நிதியம்


அதிக வேலையின்மை அரபு நாடுகளில் சமூக பதட்டங்களை மோசமாக்குகிறது - சர்வதேச நாணய நிதியம்
x

அதிக வேலையின்மை அரபு நாடுகளில் சமூக பதட்டங்களை மோசமாக்குவதாக சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை கூறியுள்ளது.

லண்டன்

அரபு நாடுகளில் வேலையின்மை, மெதுவான பொருளாதார மந்த நிலை போன்றவைகள் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் காரணங்களாக உள்ளன என சர்வதேச நாணய நிதியம் கூறி உள்ளது.

வேலையின்மை மற்றும் மந்தமான பொருளாதார வளர்ச்சி ஆகியவை பல அரபு நாடுகளில் சமூக பதற்றம் மற்றும் மக்கள் எதிர்ப்புகளைத் தூண்டுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்து உள்ளது.

 அமைதியின்மை மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க பிராந்தியத்தில் மெதுவான வளர்ச்சிக்கு பங்களிக்கிறது. 

உலகளாவிய வர்த்தக பதட்டங்கள், எண்ணெய் விலை ஏற்ற இறக்கம் மற்றும் ஒழுங்கற்ற பிரெக்சிட் செயல்முறை ஆகியவற்றுடன் பிராந்திய பொருளாதார கண்ணோட்டம் குறித்தும் சர்வதேச நாணய நிதியம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிராந்தியத்தில் வேலையின்மை சராசரியாக 11 சதவீதமாகும். பிற வளர்ந்து வரும் சந்தை மற்றும் வளரும் பொருளாதார நாடுகளில் 7 சதவீதம்  ஆகும்.  "பெண்கள் மற்றும் இளைஞர்கள் குறிப்பாக வேலையில்லாமல் இருக்க வாய்ப்புள்ளது. 18 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் 2018ல் வேலைகள் இல்லாமல் இருந்தனர் என அறிக்கை கூறுகிறது.

2010 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பல அரபு நாடுகளில் வன்முறை போராட்டங்கள் வெடித்து சிரியா, ஏமன் மற்றும் லிபியாவில்  உள்நாட்டுப் போர்களாக மாறியுள்ளன.

அல்ஜீரியா, சூடான், ஈராக் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பொதுவாக பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க கோரப்பட்டது.  

பல அரபு நாடுகளில் பொது கடன் அளவு மிக அதிகமாக உள்ளது என்றும் சர்வதேச நாணய நிதியம் கூறி உள்ளது.  சராசரியாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது. லெபனான் மற்றும் சூடானில் 150 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

அமெரிக்க பொருளாதாரத் தடைக்கு உள்ளான ஈரான், கடுமையான பொருளாதார மந்தநிலைக்குள் தள்ளப்பட்டு உள்ளது மற்றும் பணவீக்க அழுத்தங்களை அதிகரிப்பதற்கு எதிரான போரை எதிர்கொள்கிறது என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய குடியரசின் பொருளாதாரம் 2018 இல் 4.8 சதவீத எதிர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்த பின்னர் இந்த ஆண்டு 9.5 சதவீதமாக  கணிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குனர் ஜிஹாத் அஸுர் கூறியதாவது:-

பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் வளர்ச்சியின் அளவு வேலையின்மைக்குத் தேவையானதை விடக் குறைவாக உள்ளது. இளைஞர் மட்டத்தில் வேலையின்மை விகிதம் 25-30 சதவீதத்தை  தாண்டிய ஒரு பிராந்தியத்தில் நாம் இருக்கிறோம். இது வேலையின்மையில் ஒரு மாற்றத்தை உருவாக்குவதற்கு வளர்ச்சி 1-2% அதிகமாக இருக்க வேண்டும்.

லெபனானில், அரசியல் அமைப்பை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் நாட்டை ஸ்தம்பிக்க வைத்தனர். அங்கு  கடந்த சில ஆண்டுகளாக பொருளாதாரம் மிக மந்தமாக இருந்தது.

பொதுக்கடன் சுமைகளின் அளவு  கணிசமாக அதிகரித்து விட்டன. இது பிராந்தியத்தின் நீண்டகால பொருளாதார எதிர்காலத்திற்கு முக்கியமான முதலீடுகளைத் தடுக்கிறது என கூறினார்.

Next Story