உலக செய்திகள்

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப் - டுவிட்டரில் வாழ்த்தும் வெளியிட்டார் + "||" + At the White House Celebrating Diwali Trump posted a greeting on Twitter

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப் - டுவிட்டரில் வாழ்த்தும் வெளியிட்டார்

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப் -  டுவிட்டரில் வாழ்த்தும் வெளியிட்டார்
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடினர். அந்தவகையில் அமெரிக்காவிலும் தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டின.
வாஷிங்டன்,

இந்த கொண்டாட்டங்களில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் தன்னை இணைத்துக்கொண்டார். வெள்ளை மாளிகையில் உள்ள தனது ஓவல் அலுவலகத்தில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் அமெரிக்கவாழ் இந்தியர்கள் சிலருடன் மகிழ்ச்சியாக அவர் தீபாவளி கொண்டாடினார். முன்னதாக நாட்டு மக்களுக்கு அவர் தீபாவளி வாழ்த்தும் கூறினார்.


அதன்படி நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறும் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் தளத்தில் அவர் வெளியிட்டு இருந்தார். அதில் ‘இன்று நாம் இங்கு ஒளி ஏற்றும்போது நமது தேசம் புனிதமிக்க மரபுகளால் வலிமையடைந்து உள்ளது. இது நாட்டு மக்களிடையே ஒன்றிணைப்பை ஏற்படுத்துகிறது. இந்த ஒளி ஒவ்வொருவருக்கும் சிறப்பான தீபாவளியை கொண்டுவரும் என நம்புவோம்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் அவர், ‘தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் நானும், மெலனியாவும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். இனிய தீபாவளி வாழ்த்துகள்’ என்றும் அந்த வீடியோ பதிவில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தீபாவளிக்கு துணி எடுக்க சென்ற போது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விவசாயி சாவு
காரிமங்கலம் அருகே தீபாவளிக்கு துணி எடுக்க சென்ற போது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
2. புதுச்சேரியில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை - நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
3. மதுரையில் தீபாவளிக்கு முந்தைய இரு நாட்கள் அதிகாலை 2 மணி வரை கடைகளை நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி
வியாபாரிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மதுரை மாவட்டத்தில் தீபாவளிக்கு முந்தைய இரு நாட்கள் அதிகாலை 2 மணி வரை கடைகளை நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி அளித்துள்ளது.
4. பொங்கல் பண்டிகை: ரெயில் டிக்கெட் முன் பதிவு இன்று முதல் தொடக்கம்
2020 ஆம் ஆண்டின் பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன் பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
5. ‘பிகில்’ படத்துடன் மோதுகிறது: தீபாவளிக்கு கார்த்தியின் ‘கைதி’ ரிலீஸ்
தீபாவளிக்கு வெளியாக உள்ள கார்த்தியின் ‘கைதி’ படம், விஜய்யின் ‘பிகில்’ படத்துடன் மோத உள்ளது.