துபாயில் இருந்து மும்பைக்கு விமானம் புறப்படுவதில் தாமதம் - பயணிகள் டுவிட்டரில் பிரதமர் மோடிக்கு புகார்


துபாயில் இருந்து மும்பைக்கு விமானம் புறப்படுவதில் தாமதம் - பயணிகள் டுவிட்டரில் பிரதமர் மோடிக்கு புகார்
x
தினத்தந்தி 1 Nov 2019 10:22 PM GMT (Updated: 1 Nov 2019 10:22 PM GMT)

துபாயில் இருந்து மும்பைக்கு விமானம் புறப்படுவதில் தாமதம் ஆனதால், பயணிகள் டுவிட்டரில் பிரதமர் மோடிக்கு புகார் அளித்தனர்.

துபாய்,

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் மும்பைக்கு நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. இதில் பயணம் செய்ய சுமார் 200 பயணிகள் காத்திருந்தனர். அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டது.

பின்னர் மாலையில் முனையம் 2-ல் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். அந்த விமானமும் இரவு வரை புறப்படவில்லை. இதனால் பயணிகள் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டு நேற்று அதிகாலை விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அப்போதும் விமானம் புறப்படும் நேரம் பற்றி தகவல் இல்லை. ஆத்திரமடைந்த பயணிகள் சிலர் விமான நிறுவனத்திற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் டுவிட்டரில் புகார் அளித்தனர். ஆனாலும் நேற்று மாலை வரை விமானம் புறப்படவில்லை.

Next Story