நாங்கள் பாகிஸ்தான் முழுவதையும் ஸ்தம்பிக்க வைப்போம் -மவுலான பஸ்லூர் ரெஹ்மான்


நாங்கள் பாகிஸ்தான் முழுவதையும் ஸ்தம்பிக்க வைப்போம் -மவுலான பஸ்லூர் ரெஹ்மான்
x
தினத்தந்தி 5 Nov 2019 5:37 AM GMT (Updated: 5 Nov 2019 5:37 AM GMT)

நாங்கள் பாகிஸ்தான் முழுவதையும் ஸ்தம்பிக்க வைப்போம் என மதகுரு மவுலான பஸ்லூர் ரெஹ்மான் கூறி உள்ளார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மதகுரு மவுலான பஸ்லூர் ரெஹ்மான் வழங்கிய இரண்டு நாள் இறுதி எச்சரிக்கை ஞாயிற்றுக்கிழமை இரவு முடிவடைந்த நிலையில் ஜமியத் உலமா-இ-இஸ்லாம் (ஜே.யு.ஐ-எஃப்) தலைவர் மவுலானா பஸ்லூர் ரெஹ்மான், எதிர்ப்பாளர்கள் தங்கள் இலக்குகளை அடையும் வரை உள்ளிருப்பு போராட்டத்தை தொடருவார்கள்  என்று கூறியுள்ளார்.

இஸ்லாமாபத்தில் நடைபெற்ற ஆசாத்தி பேரணியில் உரையாற்றிய பஸ்லூர் ரெஹ்மான்  கூறியதாவது:-

நாங்கள் எந்தவொரு தீர்ப்பாயம் அல்லது தேர்தல் ஆணையம் அல்லது எந்த நீதிமன்றத்திற்கும் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் வெளிநாட்டு நிதி வழக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது.

இந்த சட்டவிரோத ஆட்சியாளரின் வெளிநாட்டு நிதி வழக்கு முடிவு செய்யப்படவில்லை, இந்த தேர்தல் ஆணையம் மோசடி வழக்குகளை எப்படி தீர்க்கும்?

இந்த பேரணிக்குப் பிறகு, நாங்கள் எங்கள் பயணத்தை நிறுத்த மாட்டோம்.  இன்று, நாம் இஸ்லாமாபாத்தை  ஸ்தம்பிக்க வைத்துள்ளோம். நாளை நாம் நாடு முழுவதையும் ஸ்தம்பிக்க வைப்போம் என கூறினார்.

Next Story