உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் 4 நீதிபதிகள் சுட்டுக்கொலை + "||" + Four judges shot dead in Afghanistan

ஆப்கானிஸ்தானில் 4 நீதிபதிகள் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானில் 4 நீதிபதிகள் சுட்டுக்கொலை
ஆப்கானிஸ்தானில் பாக்தியா மாகாணத்தில் உள்ள அப்பீல் கோர்ட்டில் நூருல்லா குர்பானி, ஜெயினுல்லா ஹபிஜி, முகமது இமல், சேட் கபீர் ஆகிய 4 பேர் நீதிபதிகளாக பணியாற்றி வந்தனர்.
காபூல்,

பாக்தியாவில் இருந்து நாட்டின் தலைநகரான காபூலுக்கு இவர்கள் 4 பேரும் நேற்று காரில் சென்றனர்.

காபூல்-லோகர் நெடுஞ்சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, தலீபான் பயங்கரவாதிகள் காரை வழிமறித்து அவர்களை சரமாரியாக சுட்டுக்கொன்று விட்டு தப்பினர். இந்த சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தகவலை பாக்தியா மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் அப்துல்லா ஹஸ்ரத் தெரிவித்துள்ளார்.