எச்.1 பி விசா விண்ணப்ப கட்டணத்தை 10 டாலராக உயர்த்தியது அமெரிக்கா


எச்.1 பி விசா விண்ணப்ப கட்டணத்தை 10 டாலராக உயர்த்தியது அமெரிக்கா
x
தினத்தந்தி 8 Nov 2019 4:44 AM GMT (Updated: 8 Nov 2019 4:44 AM GMT)

எச்.1 பி விசா விண்ணப்ப கட்டணத்தை 10 டாலராக அமெரிக்கா உயர்த்தியுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்-1 பி’ விசா வழங்கி வருகிறது. இந்த ‘எச்-1 பி’ விசா வழக்கமாக 3 ஆண்டுகள் வரையே நிர்ணயித்து வழங்கப்படும்.

 பிறகு தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து கொள்ள முடியும். இந்த விசாவை உலக நாடுகளில் அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர். குறிப்பாக ஐ.டி. என்றழைக்கப்படுகிற தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுகிறவர்கள் மத்தியில் இந்த விசாவுக்கு தனி மவுசு உள்ளது.

இந்த நிலையில், எச்.1பி விசா விண்ணப்ப கட்டணத்தை 10 டாலராக அமெரிக்கா உயர்த்தியுள்ளது. இந்தக்கட்டணம் திரும்பபெற முடியாத கட்டணம் ஆகும். புதிய மின்னணு முறையிலான பதிவு நடைமுறைக்கு,  உயர்த்தப்பட்ட கட்டணம் ஊக்கமளிக்கும் என்று  அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற துறை தெரிவித்துள்ளது.

Next Story