ஜப்பானில் ரூ.33 லட்சத்துக்கு ஏலம் போன நண்டு


ஜப்பானில் ரூ.33 லட்சத்துக்கு ஏலம் போன நண்டு
x
தினத்தந்தி 8 Nov 2019 11:15 PM GMT (Updated: 8 Nov 2019 9:41 PM GMT)

ஜப்பானில் ரூ.33 லட்சத்துக்கு நண்டு ஒன்று ஏலம் போனது.

டோக்கியோ,

ஜப்பானில் இப்போது பனிக்காலம். இந்த பனிக்காலத்தில் பிடிபடும் நண்டுகளை ஜப்பானியர்கள் மிகவும் விரும்பி சமைத்து சாப்பிடுகின்றனர்.

இந்த நிலையில் அந்த நாட்டின் மேற்கு பகுதியில் ஹோன்சூ தீவில், டோட்டோரி நகரில் உள்ள மீன் பிடி துறைமுகத்தில் பனிக்கால நண்டுகள் ஏலம் விடப்பட்டன. இதில் ஒரு நண்டு 46 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.33 லட்சம்) ஏலம் எடுக்கப்பட்டது. அந்த நண்டு 14.6 செ.மீ. நீளமும் 1,240 கிராம் எடையும் கொண்டதாகும்.

இது குறித்து உள்ளூர் அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “நாங்கள் எதிர்பார்க்காத விலையில் நண்டு ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நண்டு கடந்த ஆண்டின் சாதனையை முறியடித்து இருக்கிறது. எனவே இது உலகின் மிக விலையுயர்ந்த நண்டு என்று நாங்கள் நம்புகிறோம். கின்னஸ் சான்றிதழ் பெற விண்ணப்பிப்பதை அரசாங்கம் பரிசீலிக்கும்” என்றார்.


Next Story