உலக செய்திகள்

650 கி.மீ. வரை சென்று தாக்கவல்ல ‘ஷகீன்-1’ ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதித்தது + "||" + 650 km Pakistan successfully test-fired Shakeen-1 missile

650 கி.மீ. வரை சென்று தாக்கவல்ல ‘ஷகீன்-1’ ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதித்தது

650 கி.மீ. வரை சென்று தாக்கவல்ல ‘ஷகீன்-1’ ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதித்தது
650 கி.மீ. வரை சென்று தாக்கவல்ல ‘ஷகீன்-1’ ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதனை செய்தது.
இஸ்லாமாபாத்,

இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. இதில் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ரகத்தை சேர்ந்த ஷகீன்-1 ஏவுகணை குறிப்பிடத்தக்கது. இந்த ஏவுகணைகள் அனைத்து வகையான வெடிபொருட்களுடன், 650 கி.மீ. வரை சென்று தாக்கும் திறன் பெற்றதாகும்.


இந்த ஏவுகணையில் ஒன்றை நேற்று பாகிஸ்தான் திடீரென சோதித்தது. ராணுவ பயிற்சியின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததாக பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது. ராணுவத்தின் செயல்பாட்டு தயார் நிலையை சோதிக்கும் நோக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் அது குறிப்பிட்டு இருந்தது.

2 ஆயிரம் கி.மீ. வரை சென்று தாக்கவல்ல அக்னி-2 ஏவுகணையை முதல் முறையாக இரவு நேரத்தில் இந்தியா சமீபத்தில் சோதித்து இருந்தது. இந்த சூழலில் பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தி இருக்கிறது. அதுவும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் தற்போது விரிசல் ஏற்பட்டு இருக்கும் நிலையில் ஷகீன்-1 ஏவுகணை சோதனை நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.