உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் துப்பாக்கிச்சூடு: 24 தீவிரவாதிகள் மற்றும் 2 ராணுவ வீரர்கள் பலி + "||" + 24 militants and 2 soldiers killed in Afghanistan gun battle

ஆப்கானிஸ்தானில் துப்பாக்கிச்சூடு: 24 தீவிரவாதிகள் மற்றும் 2 ராணுவ வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் துப்பாக்கிச்சூடு: 24 தீவிரவாதிகள் மற்றும் 2 ராணுவ வீரர்கள் பலி
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 ராணுவ வீரர்கள் மற்றும் 24 தீவிரவாதிகள் பலியாகினர்.
காபூல்,

ஆப்கானிஸ்தானின் தர்சாப் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஆப்கான் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையின் போது தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 24 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், ஆப்கான் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 2 வீரர்கள் உயிரிழந்ததாகவும் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் பொது மக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் பலியான தீவிரவாதிகளில் 8 பேர் தலீபான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்படிருப்பதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இது குறித்து தலிபான் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. சந்தேகத்தில் மனைவியின் மூக்கை அறுத்த கணவர்
ஆப்கானிஸ்தானில் சந்தேகத்தில் மனைவியின் மூக்கை கணவர் அறுத்து எறிந்தார்.
2. பாகிஸ்தான் படைகள் நடத்திய பீரங்கித் தாக்குதல்: உஷார் நிலையில் ஆப்கானிஸ்தான் ராணுவம்
பாகிஸ்தான் படைகள் நடத்திய பீரங்கித் தாக்குதலை தொடர்ந்து ராணுவத்தை உஷார் நிலையில் இருக்க ஆப்கானிஸ்தான் உத்தரவிட்டு உள்ளது.
3. ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 17 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 17 பேர் கொல்லபட்டனர்.
4. ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாத தளபதி உள்பட 8 பேர் சுட்டுக்கொலை: ராணுவம் அதிரடி
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாத தளபதி உள்பட 8 பேர் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
5. பெற்றோரை கொலை செய்த பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற சிறுமிக்கு பாராட்டு
ஆப்கானிஸ்தானில் இரண்டு தலிபான் பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன