அல்பேனியாவில் நிலநடுக்கம்; இடிபாடுகளில் சிக்கி 6 பேர் பலி


அல்பேனியாவில் நிலநடுக்கம்; இடிபாடுகளில் சிக்கி 6 பேர் பலி
x
தினத்தந்தி 26 Nov 2019 10:00 AM GMT (Updated: 26 Nov 2019 10:00 AM GMT)

அல்பேனியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் இடிபாடுகளில் சிக்கி ஆறு பேர் பலியாகியுள்ளனர்.

டிரானா,

அல்பேனியா நாட்டின் மேற்கு கடற்கரையோரப் பகுதியில் இன்று அதிகாலை 4 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் அல்பேனியாவின் தலைநகர் டிரானாவில் இருந்து சுமார் 29 கி.மீ. தூரத்தில் உள்ள ஷிஜாக் என்ற இடத்திற்கு அருகில், 20 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளனர், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். 

மேலும் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால், அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க நாட்டு அரசாங்கங்கள் மீட்புப் பணிகளில் உதவுவதாக உறுதியளித்துள்ளன.

Next Story