உலக செய்திகள்

18 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய விலங்கு உடல்; சைபீரியாவில் கண்டெடுப்பு + "||" + Animal body before 18 millennium; Detection in Siberia

18 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய விலங்கு உடல்; சைபீரியாவில் கண்டெடுப்பு

18 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய விலங்கு உடல்; சைபீரியாவில் கண்டெடுப்பு
சைபீரியாவின் வடகிழக்கு பகுதியில், பெலாயா கோரா என்ற நகரத்துக்கு அருகே 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்து செத்துப்போனதாக கருதப்படுகிற ஒரு விலங்கின் உடல் அப்படியே உறைந்து போன நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோ, 

விலங்கின் உடல், இப்போதுதான் செத்துப்போன ஒரு விலங்கின் உடல் போலவே இருப்பது ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

குறிப்பாக விலங்கின் முடி, பற்கள் அழியாமல் உருக்குலையாமல் இருக்கின்றனவாம். அந்த விலங்கு பிறந்து 2 மாதங்களிலேயே செத்திருக்க கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இந்த விலங்கின் உடலை ஆராய்ச்சியாளர்கள் லவ் டேலன், டேஸ் ஸ்டேன்டன் ஆகியோர் தொடர் ஆராய்ச்சிக்காக சுவீடனுக்கு எடுத்துச்சென்றுள்ளனர். அதே நேரத்தில் செத்துப்போன விலங்கு நாய்க்குட்டியா, ஓநாய்க்குட்டியா என்பதை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை.