அலாஸ்காவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு


அலாஸ்காவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு
x
தினத்தந்தி 2 Dec 2019 3:58 PM GMT (Updated: 2 Dec 2019 3:58 PM GMT)

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 6.3 ரிக்டர் அளவுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் குலுங்கியதால் பொது மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. கட்டிட சேதம் மற்றும் பாதிப்புகள் குறித்த முழு தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

அலாஸ்காவில் கடந்த மாதம் அலூட்டியன் மற்றும் ஆண்ட்ரியானோப் தீவுப் பகுதிகளில் நிலடுக்கம் ஏறபட்டது. மேலும் கடந்த 2018 நவம்பர் மாதமும் அலாஸ்காவில் 7.0 ரிக்டர் அளவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கு சாலைகள் மற்றும் பாலங்கள் மிகுந்த சேதம் அடைந்ததது குறிப்பிடத்தக்கது.

Next Story