உலக செய்திகள்

சிலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் + "||" + USGS reports 6.0-magnitude quake off Chile's northern coast

சிலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சிலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
சாண்டிகோ, 

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சிலியின் வடக்குப்பகுதியில் உள்ள பெரு எல்லையை ஒட்டி அமைந்துள்ள பகுதியில் உணரப்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளது.

 உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.46 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் பசுபிக் பெருங்கடல் கரையோரம் அமைந்துள்ள அரிகா நகரத்தை மையமாக கொண்டு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கியதால், அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த மக்கள் பீதி அடைந்தனர். பல இடங்களில் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்ததை காண முடிந்தது. நிலநடுக்கத்தால், ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக எந்த தகவலும் இல்லை. 

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி - 5 பேர் காயம்
சீனாவின் தென்பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி ஒருவர் பலியானார். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.
2. சிலி நாட்டில் போராட்டம்; அர்ஜென்டினா மக்கள் ஆதரவு
சிலி நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அர்ஜென்டினாவில் மக்கள் பேரணி நடத்தினர்.
3. சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பீதியடைந்த மக்கள், வீதிகளில் தஞ்சம்
சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள், வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
4. சிலி நாட்டில் ஓயாத போராட்டம்: அரசு தொழிற்சாலைக்கு தீவைப்பு - 5 பேர் பலி
சிலி நாட்டில் நடத்த போராட்டத்தில், அரசு தொழிற்சாலைக்கு தீவைக்கப்பட்டது. இதில் சிக்கி 5 பேர் பலியாயினர்.
5. சிலி நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
சிலி நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறையில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.