ஐரோப்பிய தமிழர்கள் தினத்தையொட்டி ஜெர்மனி அருங்காட்சியகத்தில் திருவள்ளுவர் ஐம்பொன் சிலைகள் தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவியது


ஐரோப்பிய தமிழர்கள் தினத்தையொட்டி ஜெர்மனி அருங்காட்சியகத்தில் திருவள்ளுவர் ஐம்பொன் சிலைகள் தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவியது
x
தினத்தந்தி 5 Dec 2019 10:15 PM GMT (Updated: 6 Dec 2019 7:35 AM GMT)

ஜெர்மனியின் ‘லிண்டன்’ அரசு அருங்காட்சியகத்தில் திருவள்ளுவரின் 2 ஐம்பொன் சிலைகள் தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் நிறுவப்பட்டன.

பெர்லின், 

ஐரோப்பிய தமிழர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஜெர்மனியின் பாடன் உர்ட்டெம்பெர்க் மாநிலத்தின் ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள ‘லிண்டன்’ அரசு அருங்காட்சியகத்தில் திருவள்ளுவரின் 2 ஐம்பொன் சிலைகள் தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் நிறுவப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பிரெடரிக் காமரர், கார்ல் கிரவுல் ஆகியோரால் ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகம் மற்றும் தமிழக ஆய்வாளர் கவுதம சன்னா எழுதிய ‘திருவள்ளுவர் யார் - கட்டுக்கதைகளை கட்டுடைக்கும் திருவள்ளுவர்’ என்னும் புத்தகமும், தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் கதிரவன் உருவாக்கிய குழந்தைகளுக்கான திருக்குறள் மென்பொருளும், விழா மலரும் வெளியிடப்பட்டன.

நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ‘லிண்டன்’ அருங்காட்சியக இயக்குனர் இனெஸ் டி கெஸ்ட்ரோ, தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் க.சுபாஷிணி, எழுத்தாளர் கவுதம சன்னா உள்பட பலர் சிறப்புரையாற்றினர்.

Next Story