ஆப்கானிஸ்தானில் ராணுவம் அதிரடி தாக்குதல் - 5 பயங்கரவாதிகள் பலி


ஆப்கானிஸ்தானில் ராணுவம் அதிரடி தாக்குதல் - 5 பயங்கரவாதிகள் பலி
x
தினத்தந்தி 8 Dec 2019 9:54 PM GMT (Updated: 8 Dec 2019 9:54 PM GMT)

ஆப்கானிஸ்தானின் தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில், 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.


* ஈராக்கின் புதிய பிரதமர் வெளிநாடுகளின் தலையீடு இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அந்த நாட்டின் மூத்த மத குருவான அயத்துல்லா அலி அல் சிஸ்தானி தெரிவித்துள்ளார்.

* ஈரானில் நிலவும் விலைவாசி உயர்வு மற்றும் மோசமான பொருளாதார நிலை காரணமாக அங்கு பணியாற்றி வந்த மற்றும் அகதிகளாக தஞ்சமடைந்த ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கடற்படை பயிற்சி மையத்தில் 3 மாலுமிகளை சுட்டுக்கொன்ற சவுதி அரேபிய மாணவர் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு பயங்கரமான துப்பாக்கிச்சூடு சம்பவங்களின் வீடியோக்களை பார்த்துவிட்டு, தாக்குதலை அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

* இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குகரை பகுதியில் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்த முயன்றதாக கூறி பாலஸ்தீனத்தை சேர்ந்த இளம் பெண்ணை இஸ்ரேல் ராணுவத்தினர் கைது செய்தனர்.

* ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள பாரா மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

Next Story