உலக செய்திகள்

துப்பாக்கி சூடு எதிரொலி: சவுதி மாணவர்களுக்கு விமான பயிற்சி நிறுத்தம் - அமெரிக்கா அதிரடி + "||" + The echo of the firing: Saudi students stop air training - US Action

துப்பாக்கி சூடு எதிரொலி: சவுதி மாணவர்களுக்கு விமான பயிற்சி நிறுத்தம் - அமெரிக்கா அதிரடி

துப்பாக்கி சூடு எதிரொலி: சவுதி மாணவர்களுக்கு விமான பயிற்சி நிறுத்தம் - அமெரிக்கா அதிரடி
துப்பாக்கி சூடு எதிரொலியாக, சவுதி மாணவர்களுக்கு விமான பயிற்சியினை நிறுத்தம் செய்து அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது,
வாஷிங்டன்,

அமெரிக்காவில் புளோரிடா மாகாணம், பென்சாகோலா என்ற இடத்தில் உள்ள கடற்படை பயிற்சி நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சவுதி அரேபியாவை சேர்ந்த பயிற்சி மாணவரான முகமது அல் ஷாம்ரானி துப்பாக்கி சூடு நடத்தினார்.


இதில் குண்டு பாய்ந்து 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து, தாக்குதல் நடத்திய முகமது அல் ஷாம்ரானியை போலீசார் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த சம்பவத்தின் எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள கடற்படை விமான நிலையங்களில் சவுதி அரேபிய ராணுவ மாணவர்களுக்கு விமான பயிற்சி அளிப்பதை அமெரிக்கா அதிரடியாக நிறுத்தியுள்ளது. ராணுவ மந்திரி மார்க் எஸ்பர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

விமானத்தை இயக்குவதற்கான பயிற்சியை மட்டுமே நிறுத்தியுள்ளதாகவும், வகுப்பறை படிப்புகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பால், அமெரிக்காவில் பயிற்சி பெறும் சுமார் 300 சவுதி அரேபிய மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த நடவடிக்கை அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா இடையிலான நட்புறவில் விரிசலை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் தொடரும் பயங்கரவாதிகள் அராஜகம்; பா.ஜ.க. மாவட்ட தலைவர் உயிரிழப்பு
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுடப்பட்ட பா.ஜ.க. மாவட்ட தலைவர் அப்துல் ஹமீது நஜார் உயிரிழந்து உள்ளார்.
2. காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு; பா.ஜ.க. மாவட்ட தலைவர் மருத்துவமனையில் அனுமதி
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் அப்துல் ஹமீது நஜார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
3. காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு; இந்தியா பதிலடி
காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது.
4. நடிகை கங்கனா ரணாவத் வீட்டில் துப்பாக்கி சூடு; போலீஸ் குவிப்பு
நடிகை கங்கனா ரணாவத் வீட்டில் துப்பாக்கி சூடு நடந்த நிலையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
5. ஆப்கானிஸ்தானில் கவர்னர் பாதுகாப்பு வாகனம் மீது துப்பாக்கி சூடு; பாதுகாவலர் பலி
ஆப்கானிஸ்தானில் கவர்னருடன் சென்ற பாதுகாப்பு வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டார்.

ஆசிரியரின் தேர்வுகள்...