உலக செய்திகள்

காஷ்மீர் விவகாரம்; ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் விடுத்த கோரிக்கையை திரும்ப பெற்றது சீனா + "||" + India speaks to UNSC members, China withdraws request to discuss Kashmir issue

காஷ்மீர் விவகாரம்; ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் விடுத்த கோரிக்கையை திரும்ப பெற்றது சீனா

காஷ்மீர் விவகாரம்; ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் விடுத்த கோரிக்கையை திரும்ப பெற்றது சீனா
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஆலோசிக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை சீனா திரும்ப பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெனீவா,

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக சர்வதேச நாடுகளை நாடியது. ஆனால், சீனாவைத்தவிர பாகிஸ்தானுக்கு எந்த நாடும் சொல்லிக்கொள்ளும்படி இந்த  விஷயத்தில் ஆதரவு அளிக்கவில்லை.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலவரம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்க வேண்டும் என்று சீனா கோரிக்கை விடுத்ததாகவும் இதன்படி, செவ்வாய்க்கிழமை காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 2-வது முறையாக ரகசிய ஆலோசனை நடத்தப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.   ஆனால், ஐக்கிய நாடுகள் அவையின் 15 உறுப்புகள் நாடுகளுடன் (5 நிரந்தர உறுப்பு நாடுகள், 10 தற்காலிக உறுப்பு நாடுகள்)  இந்திய தூதரகம் தீவிர ஆலோசனை நடத்தியது. இதன் பயனாக சீனா விடுத்த கோரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளதாக  செய்தி வெளியானது.

கடந்த 12 ஆம் தேதி, காஷ்மீரில் மேலும் பதற்றங்களுக்கு சாத்தியம் இருப்பதாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகம்மது குரோஷி  கவலை தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர் விவகாரம் பற்றி ஆலோசிக்க இஸ்லாமிய நாடுகள் மாநாடு: சவுதி அரேபியா ஏற்பாடு
காஷ்மீர் விவகாரம் பற்றி ஆலோசிக்க இஸ்லாமிய நாடுகள் மாநாட்டுக்கு சவுதி அரேபியா ஏற்பாடு செய்துள்ளது.
2. காஷ்மீர் விவகாரத்தில் பதவி விலகிய ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு நூலகத்துக்குள் நுழைய அனுமதி மறுப்பு
காஷ்மீர் விவகாரத்தில் பதவி விலகிய ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு, நூலகத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
3. இந்தியாவிற்கு பயங்கரவாதிகள் சந்திரனில் இருந்து வரவில்லை ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுக்கு ஆதரவு
இந்தியாவிற்கு பயங்கரவாதிகள் சந்திரனில் இருந்து வரவில்லை பக்கத்து நாட்டில் இருந்துதான் வருகிறார்கள் என ஐரோப்பிய ஒன்றியம் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.
4. வெள்ளைக்கொடி ஏந்தி வந்து மீட்டுச்சென்ற பாகிஸ்தான் வீரர்கள் - வைரலாகும் வீடியோவால் ராணுவத்துக்கு பாராட்டு மழை
காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் பதிலடியில் கொல்லப்பட்ட பாகிஸ்தான் வீரர்களின் உடல்களை, சக ராணுவ வீரர்கள் வெள்ளைக்கொடி ஏந்தி வந்து மீட்டுச்சென்ற சம்பவம் சமீபத்தில் அரங்கேறியது.
5. காஷ்மீர் விவகாரத்தை நேரு கையாண்ட விதம் தவறு - ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு
காஷ்மீர் விவகாரத்தை நேரு கையாண்ட விதம் தவறு என ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.