பிலிப்பைன்ஸில் ‘உர்சுலா’ புயல் தாக்குதல்: பலியானவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்வு


பிலிப்பைன்ஸில் ‘உர்சுலா’ புயல் தாக்குதல்: பலியானவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்வு
x
தினத்தந்தி 29 Dec 2019 10:27 PM GMT (Updated: 29 Dec 2019 10:27 PM GMT)

பிலிப்பைன்ஸ் நாட்டில் ‘உர்சுலா’ புயல் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது.


* ஆப்கானிஸ்தானில் டக்கார் மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகள் நேற்று கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் உள்ளூர் போராளிகள் 17 பேர் உயிரிழந்தனர். குறிவைக்கப்பட்ட போராளிகளின் தளபதி காயமின்றி தப்பினார்.

* அர்ஜெண்டினா நாட்டில் ஒரு தனியார் விமானம் 9 பேருடன் பியூனஸ் அயர் நகரில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்டது. வானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென என்ஜின்களில் ஒன்று பழுதானது. இதனால் மிராமர் நகருக்கு வெளியே ஒரு சோள வயலில் விமானத்தை விமானி அவசரமாக தரையிறக்கினார். இதில் விமானம் சற்றே சேதம் அடைந்தாலும் அனைவரும் காயமின்றி தப்பினர்.

* பிலிப்பைன்ஸ் நாட்டில் ‘உர்சுலா’ புயல் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது.

* பிரான்ஸ் நாட்டில் ஓய்வூதிய சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தலைநகர் பாரீசில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

* புவேர்ட்டோ ரிகோ நாட்டில் நேற்று நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.1 புள்ளிகளாக பதிவான இந்த நில நடுக்கத்தில் சேதங்கள் உண்டா என்பது பற்றி உடனடியாக தெரியவரவில்லை.

* பிஜி தீவில் ‘சாராய்’ புயல் தாக்கியது. இதன்காரணமாக பலத்த மழை பெய்தது. இதில் ஒருவர் பலியானார். 2,500 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.


Next Story