அமெரிக்க தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி உயிரிழப்பு..! மூன்றாம் உலகப் போருக்கான தொடக்கப் புள்ளி!


அமெரிக்க தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி உயிரிழப்பு..! மூன்றாம் உலகப் போருக்கான தொடக்கப் புள்ளி!
x
தினத்தந்தி 3 Jan 2020 7:00 AM GMT (Updated: 3 Jan 2020 8:11 AM GMT)

அமெரிக்கப் படைகள் தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி உயிரிழப்பு..! மூன்றாம் உலகப் போருக்கான தொடக்கப் புள்ளி என்று சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை.

வாஷிங்டன்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீது ராக்கெட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் வெடித்து சிதறின. விமான நிலையத்தில் சரக்குகள் கையாளும் பகுதியில் ராக்கெட்டுகள் விழுந்து வெடித்தன.

இந்த தாக்குதலில், ஈரானிய புரட்சி பாதுகாப்பு படையின் குத்ஸ் படைப்பிரிவு தளபதி காசிம் சோலிமானி, ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் முக்கிய கமெண்டர் அபு மகாதி உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர்.

சமீபத்தில் நடந்த அமெரிக்க தூதரக தாக்குதலை இந்த ராணுவக்குழு நடத்தியதாக அமெரிக்கா கூறி வந்தது.

ஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டதை உறுதி செய்த பென்டகன், அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின்பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளது. வெளிநாடுகளில், அமெரிக்கர்களின் நலனை காக்கும் வகையில், அதிபர் டிரம்ப் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என கூறப்பட்டு உள்ளது.

இதில், காசிம் சுலைமானி, அமெரிக்காவால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஈராக் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்த சுலைமானி திட்டமிட்டிருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கப் படைகள் தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி உயிரிழப்பு..! மூன்றாம் உலகப் போருக்கான தொடக்கப் புள்ளி என்று சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல ஆண்டுகளாக பனிப்போர் நிலவி வந்த நிலையில், இந்த தாக்குதல் இரு நாடுகளுக்கு இடையேயான புதிய மோதலுக்கு  வழிவகுக்கும்.  ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா உள்ளிட்ட அமெரிக்க எதிர்ப்பு நாடுகள் ஒன்றிணையும் பட்சத்தில் அது மூன்றாம் உலகப் போருக்கான தொடக்க புள்ளியாக அமையும்  என்றும் சர்வதேச நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story