உலக செய்திகள்

அமெரிக்காவில் 9 லட்சம் பேர் இந்தி மொழி பேசுகிறார்கள் + "||" + 9 Lach people speak Hindi in the US

அமெரிக்காவில் 9 லட்சம் பேர் இந்தி மொழி பேசுகிறார்கள்

அமெரிக்காவில் 9 லட்சம் பேர் இந்தி மொழி பேசுகிறார்கள்
அமெரிக்காவில் 9 லட்சம் பேர் இந்தி மொழி பேசி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,

“அமெரிக்காவில் இந்திய தூதரகத்தின் சார்பில் இலவச வகுப்புகள் மூலம் இந்தி மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது. 9 லட்சத்திற்கும் அதிகமான பேர் அங்கு இந்தி பேசி வருகிறார்கள்” என்று அமெரிக்காவிற்கான இந்திய தூதரக பொறுப்பு அதிகாரி அமித் குமார் தெரிவித்தார்.


இந்தியாவிற்கு சுற்றுலா செல்பவர்கள், தொழில் தொடங்குபவர்கள் மற்றும் இதர தேவைகளுக்காக செல்பவர்கள் இந்தி கற்று கொண்டால் இந்திய மக்களின் மனங்களை எளிதில் வென்று விடலாம் என்றும் அவர் சொன்னார்.

கடந்த 2 ஆண்டுகளாக இந்திய தூதரகம் மூலம் அமெரிக்கா மற்றும் அங்கு வசித்து வரும் பிற நாட்டு மக்களுக்காக இலவச இந்தி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் அமெரிக்காவில் பல பள்ளிகளிலும், புகழ்பெற்ற இரண்டு பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி மையத்திலும் இந்தி கற்பிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. 5 சக ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்த ஊழியர்
அமெரிக்காவில் பீர் தொழிற்சாலையில் 5 சக ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலைச் செய்து கொண்ட ஊழியர்.
2. அமெரிக்காவின் விண்வெளி கனவுகளை நனவாக்கிய ‘மனித கம்ப்யூட்டர்’ கேத்தரின் ஜான்சன் மரணம்
அமெரிக்காவை சேர்ந்த பெண் கணித மேதை கேத்தரின் ஜான்சன். மனித கம்ப்யூட்டர் என்று அழைக்கப்பட்டு வந்த இவர், வயோதிகம் காரணமாக நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 101.
3. அமெரிக்காவில் விண்ணில் பறக்க முயன்ற விமானி தவறி விழுந்து சாவு
அமெரிக்காவில் விண்ணில் பறக்க முயன்ற விமானி தவறி விழுந்து உயிரிழந்தார்.
4. அமெரிக்காவில் இந்திய வாலிபர் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் இந்திய வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
5. அமெரிக்காவின் நிகழ்ந்த பஸ் விபத்தில் 3 பேர் பலி - 18 பேர் படுகாயம்
அமெரிக்காவின் சாண்டியாகோ நகரில் நிகழ்ந்த பஸ் விபத்தில், 3 பேர் பலியாயினர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர்.