ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணைகள் தாக்குதலால் பரபரப்பு


ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணைகள் தாக்குதலால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 Jan 2020 1:08 AM GMT (Updated: 21 Jan 2020 1:08 AM GMT)

ஈராக் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே 3 ஏவுகணைகள் தாக்கிய நிலையில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

பாக்தாத்,

ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் அதிக பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டல பகுதியில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ளது.

இதன் அருகே 3 ஏவுகணைகள் திடீரென வந்து விழுந்தன.  இந்த தாக்குதலால் ஏற்பட்ட காயமடைந்தோர் விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

இதனை அடுத்து போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர்.  இந்த தாக்குதலை ஈரான் ஆதரவு பெற்ற துணை ராணுவ படை குழுக்கள் நடத்தியுள்ளன என அமெரிக்கா குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.  சமீப காலங்களில் பசுமை மண்டல பகுதியில் இதுபோன்ற தாக்குதல்களை இந்த குழுவினர் நடத்தியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

எனினும், இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.  அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் மூளும் சூழ்நிலை எழுந்துள்ள நிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்கள் நடந்திருப்பது அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

Next Story