உலக செய்திகள்

திருமணத்தை விட சிறையே சிறந்தது காதலி தொல்லையால் வேண்டுமென்றே திருடி சிறை சென்ற வாலிபர் + "||" + Chinese Man Steals Speakers, Gets Arrested To Escape Wedding

திருமணத்தை விட சிறையே சிறந்தது காதலி தொல்லையால் வேண்டுமென்றே திருடி சிறை சென்ற வாலிபர்

திருமணத்தை விட சிறையே சிறந்தது காதலி தொல்லையால்  வேண்டுமென்றே திருடி சிறை சென்ற வாலிபர்
திருமண செய்துகொள்ள வற்புறுத்திய காதலியிடம் இருந்து தப்பிக்க வேண்டுமென்றே திருடி வாலிபர் ஒருவர் சிறைக்குச் சென்று உள்ளார்.
பெய்ஜிங்

சீனாவைச் சேர்ந்த இளைஞர் சென். இவர் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு அப்பெண் ஜென்னிடம் கூறியுள்ளார். அதற்கு சென் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் அப்பெண் திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்கமுடியாத சென், அருகில் இருந்த டான்ஸ் ஸ்டூடியோவுக்கு சென்று அங்கிருந்த ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள ஸ்பீக்கரை திருடியுள்ளார். திருட்டு புகாரில் உடனடியாக சென்னை, போலீசார் கைது செய்தனர். மகிழ்ச்சியாக கைதான சென், காதலியிடம் இருந்த தப்பிக்க வேறு வழி தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நிச்சயம் போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்று தனக்குத் தெரியும் என கூலாக தெரிவித்துள்ளார். காதலியிடம் இருந்து தப்பிக்க போலீசில் மாட்டினாலும், இந்த சம்பவத்துக்கு பிறகு சென்னின் காதலி பிரிந்து சென்றுவிட்டாரா என தெரியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னின் கதை இணையத்தில் பலருக்கும் சிரிப்பை வரவழைத்துள்ளது. ''இப்படி ஒரு கதையை இதுநாள் வரை கேட்டதில்லை என பலரும் நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ்: இந்தியாவின் உதவியை ஏற்பதை தள்ளிப்போடும் சீனா - வெளிநாடுகளிலும் உயிர்ப்பலி அதிகரிப்பு
சீனாவில் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,345 ஆக உயர்ந்துவிட்ட நிலையிலும், இந்த பேரிடருக்கு உதவ முன்வந்துள்ள இந்தியாவின் விருப்பத்தை வேண்டுமென்றே அந்த நாடு தள்ளிப்போட்டு வருகிறது.
2. "உள்ள ஒரே இருட்டு.. ஒரு லைட்டு கூட இல்ல" பிறந்தவுடனேயே மீம்ஸ் ஆன குழந்தை
பிறந்த குழந்தை ஒன்று, “உள்ளே ஒரே இருட்டு...ஒரு லைட்டு கூட இல்ல” என்கிறபடி மருத்துவரை பார்த்து முறைப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வட்டமடித்து வருகிறது.
3. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு: இந்தியாவில் தொலைக்காட்சி, ஏசி,பிரிட்ஜ் விலை உயரும் அபாயம்
சீனாவில் ஏற்பட்டு உள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் தொலைக்காட்சி, ஏசி, பிரிட்ஜ் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
4. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: சீன குடிமக்கள் ரஷ்யா வர தடை
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீன குடிமக்கள் நாளை முதல் ரஷ்யா வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
5. கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு அதிக ஆபத்து-ஆய்வில் தகவல்
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு அதிக ஆபத்து இருப்பதை சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய ஆய்வு அறிக்கை தெரிவித்து உள்ளது.