சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல்: வெளியேற முடியாமல் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்கள்!


சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல்: வெளியேற முடியாமல் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்கள்!
x
தினத்தந்தி 24 Jan 2020 10:25 AM GMT (Updated: 24 Jan 2020 10:25 AM GMT)

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் வெளியேற முடியாமல் இந்திய மாணவர்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.

பெய்ஜிங்

சீனாவில் கொரோனா வைரசால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸ் துவங்கிய உவானில் படிக்கும் இந்திய மாணவர்கள் 25 பேர் இந்தியா திரும்பி உள்ளனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் யாருக்கும் நோய் பாதிப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயிரத்து 200 க்கும் அதிகமான இந்திய மாணவர்கள் 
உவானில்
 படித்து வருகின்றனர். அங்கிருக்கும் இந்தியர்கள் நிலைமை குறித்த விவரங்களை.+8618612083629 +8618612083617 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழலில் சீனாவில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களுக்கு அடுத்த சில நாட்களுக்கு மட்டுமே உணவிருப்பதாகவும், இந்த நிலை இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்றும் அச்சம் கொண்டுள்ளனர்.

கொரானா வைரஸ் பாதிக்கப்பட்ட சீனாவில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்கள்! அவல நிலை குறித்து மருத்துவ மாணவர் மணிசங்கர் விவரித்து உள்ளார்.  விரைந்து மீட்கவும் கோரிக்கை விடுத்து உள்ளார்.

சீனாவின் உவானில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதியாகி உள்ள நிலையில், சிங்கப்பூரில் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள அந்நாட்டு அரசாங்கம், இது மேலும் பரவாமல் இருப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த 2003 ல் சிங்கப்பூரில் பரவிய சார்ஸ் வைரஸ் தாக்குதலை சமாளித்த அனுபவம் உள்ளதால் கொரோனா தாக்குதலை கட்டுப்படுத்துவதில் தங்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்  தெரிவித்துள்ளார். அதே சமயம் 33 பேரை பலி வாங்கிய சார்ஸ் தாக்குதல் அளவிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்காது என்று நம்புவதாகவும் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள செய்தியில் அவர் கூறி உள்ளார்.

Next Story