பாமாயில் இறக்குமதிக்கு இந்தியா கட்டுப்பாடுகள் விதித்திருப்பது தற்காலிகமானதுதான் : மலேசியா


பாமாயில் இறக்குமதிக்கு  இந்தியா கட்டுப்பாடுகள் விதித்திருப்பது தற்காலிகமானதுதான் : மலேசியா
x
தினத்தந்தி 4 Feb 2020 5:31 AM GMT (Updated: 4 Feb 2020 5:31 AM GMT)

பாமாயில் இறக்குமதிக்கு இந்தியா கட்டுப்பாடுகள் விதித்திருப்பது தற்காலிகமானதுதான் என்று மலேசியா தெரிவித்துள்ளது.

கோலாலம்பூர்,

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததையும், குடியுரிமை சட்ட திருத்தத்தையும் மலேசியா கடுமையாக விமர்சித்தது. இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து மலேசியா கருத்து தெரிவித்து வந்தது. இதனால், அதிருப்தி அடைந்த இந்தியா, மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் அளவை கணிசமாக குறைத்தது. 

மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும்  இறக்குமதியாளர்களை இந்திய அரசு கேட்டுக்கொண்டது.  இந்தியாவின் தடையால்  மலேசியாவுக்கு பொருளாதார ரீதியாக அதிக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருந்தன. 

இந்த நிலையில், மலேசியாவின் பாமாயில் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், இந்தியா விதித்துள்ள கட்டுப்பாடுகள் தற்காலிகமானதுதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக மலேசியாவின் பாமாயில் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது ; - “ நீண்ட காலமாக இருதரப்பு உறவுகளை கொண்டிருக்கும் இருநாடுகளும் தற்போதைய சவாலான சூழலில் இருந்து மீண்டு வரும். பாமாயில் இறக்குமதிக்கு இந்தியா விதித்து இருக்கும் கட்டுப்பாடுகள் தற்காலிகமானதுதான்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story