அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்றுங்கள் - சீன ரசிகர்களுக்கு இந்தி நடிகர் அமீர்கான் உருக்கமான வேண்டுகோள்


அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்றுங்கள் - சீன ரசிகர்களுக்கு இந்தி நடிகர் அமீர்கான் உருக்கமான வேண்டுகோள்
x
தினத்தந்தி 22 Feb 2020 8:35 PM GMT (Updated: 22 Feb 2020 8:35 PM GMT)

கொரோனா வைரசால் பாதிப்பு தொடர்பாக, அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்றுங்கள் என சீன ரசிகர்களுக்கு இந்தி நடிகர் அமீர்கான் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெய்ஜிங்,

பிரபல இந்தி நடிகர் அமீர்கான் நடித்த படங்கள் சீனாவில் மிகுந்த வரவேற்பை பெறும். இதனால் அவருக்கு சீனாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கொரோனா வைரஸ் நோயால் சீன மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இந்தநிலையில் சீனாவில் உள்ள ஒரு வெய்போ என்ற சமூக வலைத்தளத்தில் இந்தி நடிகர் அமீர்கான் வீடியோ மூலம் ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார். அதில் அவர் பேசியதாவது:-

சீனாவில் உள்ள எனது அன்பான நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். அங்கு கொரோனா வைரஸ் அங்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது கண்டு நான் மிகவும் கவலை அடைந்தேன். நான் எனது நண்பர்கள் சிலருடன் தொடர்பில் உள்ளேன். இந்த துயர சம்பவம் எனது இதயத்தில் மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது. இதற்கு பலியானவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வைரசை தடுக்க அரசு அறிவிக்கும் தடுப்பு நடவடிக்கையை அனைவரும் பின்பற்றி அதன்படி நடக்க வேண்டும் என்று அதில் அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story