சிரியாவுக்கு எதிராக துருக்கி "ஸ்பிரிங் ஷீல்டு" ஆபரேஷன்


படம்: IBRAHIM YASOUF/AFP via Getty
x
படம்: IBRAHIM YASOUF/AFP via Getty
தினத்தந்தி 2 March 2020 10:20 AM GMT (Updated: 2 March 2020 12:22 PM GMT)

சிரியாவின் இரண்டு போர் விமானங்களை சுட்டு 100 டாங்கிகளை அழித்து பதிலடி கொடுத்திருப்பதாக துருக்கிய பாதுகாப்பு மந்திரி ஹுலுசி அகர் கூறியுள்ளார்.

அங்காரா

வடக்கு சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் ரஷ்யா கூட்டுப்படைகளுடன் சேர்ந்து சிரியா நடத்திய வான்வழி தாக்குதலில் 34 துருக்கிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து உள்ள நிலையில், பதிலடி கொடுக்கும் விதமாக துருக்கி நடத்திய தாக்குதலில் இரண்டு சிரியாவின் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதோடு. 100 டாங்கிகள் அழிக்கப்பட்டுள்ளன.

மேலும், ஆறு வான் பாதுகாப்பு அமைப்புகள் அழிக்கப்பட்டிருப்பதாக, துருக்கிய பாதுகாப்பு மந்திரி ஹுலுசி அகர் கூறியுள்ளார். இந்த நடவடிக்கை "ஸ்பிரிங் ஷீல்டு" என்கிற பெயரில் மேற்கொள்ளப்பட்டதாக அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதற்கிடையே மூன்று ரஷ்ய பத்திரிகையாளர்கள் இஸ்தான்புல்லில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால், ரஷ்யாவுடனான துருக்கியின் உறவும் மேலும் வலுவிழந்து உள்ளது.

Next Story