தலீபான்களுடனான ஒப்பந்தம்: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் தொடங்கியது


தலீபான்களுடனான ஒப்பந்தம்: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் தொடங்கியது
x
தினத்தந்தி 10 March 2020 10:37 PM GMT (Updated: 10 March 2020 10:37 PM GMT)

தலீபான்களுடனான ஒப்பந்தப்படி ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் தொடங்கியது.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர தலீபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்க அரசு அமைதி பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் பலனாக கடந்த மாதம் 29-ந் தேதி இருதரப்புக்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின்படி ஆப்கானிஸ்தான் அரசுடனான போரை தலீபான்கள் நிறுத்துவதற்கு பிரதிபலனாக அங்குள்ள தங்கள் நாட்டு படை வீரர்களை முழுமையாக திரும்பப்பெற அமெரிக்கா ஒப்புக்கொண்டது.

அதன்படி ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் வீரர்களை திரும்பப்பெறும் பணிகளை அமெரிக்கா தற்போது தொடங்கியுள்ளது. இதுகுறித்து ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க செய்தி தொடர்பாளர் சன்னி லெகட் கூறுகையில், அடுத்து வரும் 135 நாட்களுக்குள் வீரர்களின் எண்ணிக்கையை 12 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் அஷ்ரப்கனி மற்றும் அப்துல்லா ஆகிய 2 பேரும் அதிபராக பதவியேற்றது, அந்த நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் சூழலில் அமெரிக்கா தனது படை வீரர்களை வாபஸ் பெற தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story