உலக செய்திகள்

டிரம்புக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையா? - அவரே அளித்த பதில் + "||" + Is Coronavirus testing for Trump? - His answer

டிரம்புக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையா? - அவரே அளித்த பதில்

டிரம்புக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையா? - அவரே அளித்த பதில்
டிரம்புக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையா செய்யப்பட்டது குறித்து, அவரே பதில் அளித்துள்ளார்.
வாஷிங்டன்,

அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள மார் எ லாகோ சொகுசு விடுதியில் ஜனாதிபதி டிரம்பை கடந்த வாரம் பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனரோவும், தகவல்தொடர்பு தலைவர் பாபியோ வாஜின்கார்ட்டனும் சந்தித்து பேசினர்.


அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் ஜெயிர் போல்சொனரோவுக்கு பாதிப்பு இல்லை. ஆனால் பாபியோ வாஜின்கார்ட்டனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்து, வாஷிங்டனில் நேற்று முன்தினம் ஜனாதிபதி டிரம்ப் நிருபர்களிடம் பேசினார்.

அப்போது அவரிடம், “பாபியோ வாஜின்கார்ட்டனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நீங்கள் ஏன் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவில்லை?” என்று நிருபர்கள் மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பினர்.

அதற்கு டிரம்ப் பதில் அளிக்கையில், “நான் பரிசோதனை செய்து கொள்ளப்போவது இல்லை என்று சொல்லவில்லை. பெரும்பாலும் நானும் பரிசோதனை செய்து கொள்வேன். அந்த காரணத்துக்காக (பாபியோ வாஜின்கார்ட்டனுக்கு பாதிப்பு உள்ளதால்) அல்ல. நானும் செய்து கொள்ள வேண்டும் என்று கருதுவதால், அந்த பரிசோதனையை செய்து கொள்வேன்” என கூறினார்.

அதே நேரத்தில் தனக்கு அந்த வைரஸ் தாக்கத்துக்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஜூன் 6-க்கு பிறகு நடு இருக்கைகளை காலியாக வைக்க வேண்டும் -ஏர் இந்தியாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
சர்வதேச சிறப்பு விமானங்களில் ஜூன் 6-க்கு பிறகு நடு இருக்கைகளை காலியாக வைத்து இயக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
2. கேரளா மாநிலத்தில் ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா
கேரளா மாநிலத்தில் ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. நேபாளத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 675- ஆக உயர்வு
நேபாளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. உலக அளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,45,068 ஆக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 3,45,068 ஆக உயர்ந்துள்ளது.
5. பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்தது
பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 21 ஆயிரத்தை கடந்துள்ளது.