உயர் பதவி வகித்த ஈரானிய மதகுரு கொரோனா வைரசால் உயிரிழப்பு


உயர் பதவி வகித்த ஈரானிய மதகுரு கொரோனா வைரசால் உயிரிழப்பு
x
தினத்தந்தி 16 March 2020 9:43 AM GMT (Updated: 16 March 2020 11:17 AM GMT)

உயர் பதவியில் இருந்த ஈரானிய மதகுரு கொரோனா வைரசால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

தெக்ரான்

சீனாவில் உருவாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளையே அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறது. உலக அளவில், 1,58,000-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 6500-ஐ தாண்டியது.

ஐரோப்பிய நாடுகளை மொத்தமாக புரட்டிப்போட்டுள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பு. இதில் கடுமையாக பாதிப்புக்கு உள்ளான நாடாக இத்தாலி உள்ளது. மிலன் நகரத்தை உள்ளடக்கிய லோம்பார்டியின் வடக்கு பகுதி கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.பெர்கமோ பகுதி வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மருத்துவமனையில் சவக்கிடங்கு நிரம்பியுள்ளது.மட்டுமின்றி அடக்கம் செய்ய காத்திருக்கும் சடலங்கள் பொதுவாக தேவாலயங்களில் வைக்கப்பட்டுள்ளன.மட்டுமின்றி ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு முறை இத்தாலியில் இறுதிச் சடங்குகள் நடைபெறுவதாக  அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டாம் எனவும், அவர்களை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அனுமதிக்க வேண்டாம் என உயரதிகாரிகள் ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து இத்தாலி மொத்தமாக முடக்கப்பட்டுள்ளது. பெர்கமோ பகுதியில் மட்டும் கடந்த ஒரே வாரத்தில் 146 பேர் மரணமடைந்துள்ளனர்.இந்த நிலையில் உள்ளூர் பத்திரிகை ஒன்று சுமார் பத்து பக்கங்களுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.மேலும் துரின் பகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அனுமதிக்க வேண்டாம் என்ற ரகசிய அறிவுத்தலும் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், அவசர சிகிச்சைக்கான வசதிகளில் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஈரானில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 113 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர் .

ஈரானின் சட்டமன்ற நிபுணர் குழுவின் உறுப்பினர் அயதுல்லா ஹஷேம் பதேய்-கோல்பாய்கனி கொரோனா வைரஸால் இறந்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பதேய்-கோல்பாய்கனி கடந்த சனிக்கிழமை கோம் நகரத்தில் உள்ள ஷாஹித் பெஹெஷ்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்தார். ஹஷேம் ஒரு உயர்மட்ட மதகுரு மற்றும் நிபுணர்களின் சட்டமன்றத்தின் 88 உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார், இது ஈரானின் உச்ச தலைவரை தீர்மானிக்கும் உயர் மதகுருக்களின் முக்கிய அரசாங்க அமைப்பாகும்.

ஈரானின் உள்ளுர் ஊடக தகவல்களின் படி  குறைந்தது 1,400 கோம் குடிமக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், 

ஈரானில் கொரோனாவால் 724 பேர் பலியாகியுள்ளனர். 13,938 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஈரானின் நிபுணர்களின் குழு என்பது மதகுரு அமைப்பாகும், இது மேற்பார்வை, நியமனம் மற்றும் கோட்பாட்டில், உச்ச தலைவரை கூட பதவி நீக்கம் செய்ய முடியும். ஈரானில் கொரோனா வைரஸ் பரவியதிலிருந்து குறைந்தது 14 அரசாங்க முக்கிய புள்ளிகள் வைரஸால் இறந்துவிட்டனர், மேலும் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நான்கு பேர் காம்கர், பெர்கானி, இமாம் ரெசா, அலி இப்னு அபிதலெப் மற்றும் ஷாஹித் பெஹெஷ்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story