மலைபோல் குவியும் ஆன்லைன் ஆர்டர்கள்


மலைபோல் குவியும் ஆன்லைன் ஆர்டர்கள்
x
தினத்தந்தி 18 March 2020 10:26 PM GMT (Updated: 18 March 2020 10:26 PM GMT)

கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தொடர்ந்து, ஆன்லைனில் ஆர்டர்கள் மலைபோல் குவிகிறது.

வாஷிங்டன்,

கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தொடர்ந்து அமெரிக்க மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். அத்தியாவசிய பொருட்களை ஆன்லைன் மூலமே ஆர்டர் செய்து வாங்கி வருகின்றனர். இதனால் பல்வேறு ஆன்லைன் விற்பனைத் தளங்களுக்கு ஆர்டர்கள் மலைபோல் குவிகிறது. அதேநேரம் ஆர்டரை எடுத்து பேக்கிங் பிரிவுகளுக்கு அனுப்ப ஆள் இல்லாத சூழல் நிலவுகிறது.

இப்பிரச்சினையை சமாளிக்க ஒரு லட்சம் ஊழியர்களை புதிதாக பணியில் அமர்த்த பிரபல ஆன்லைன் விற்பனைத் தளமான அமேசான் முடிவெடுத்துள்ளது. டெலிவரிக்காகவே பெரும்பாலான ஊழியர்களை வேலைக்கு எடுப்பதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. அமேசான் நிறுவனம் மணிக்கு 15 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,100) சம்பளமாக வழங்கி வந்த நிலையில் தற்போது மணிக்கு 17 டாலர்கள் சம்பளம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

Next Story