உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கியது


உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கியது
x
தினத்தந்தி 25 March 2020 1:54 AM GMT (Updated: 25 March 2020 2:16 AM GMT)

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

ஜெனீவா,

சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் பரவி விட்டது.  வைரசின் பிறப்பிடமான சீனாவின் உகான் நகரில் வைரஸ் கட்டுக்குள் வந்தாலும், இத்தாலி, அமெரிக்கா, பிரான்சு, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தனது கோர முகத்தைக் காட்டி வருகிறது. 

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18,887 ஆக அதிகரித்துள்ளது. 422,566 பேர் பாதிக்கப்பட்ட நிலையில்,  108,388-பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.  இத்தாலியில், புதிதாக 5249 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இத்தாலியில்  ஒரே நாளில் 743 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு  6,820 பேர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி  அங்குப் புதிதாக 11 ஆயிரம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்காவில் 200-க்கு மேற்பட்ட உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. ஒட்டு மொத்தமாக அமெரிக்காவில் 775 பேர்  கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.  

Next Story