கொரோனா பாதிப்பு:2 மாத ஊரடங்கிற்கு பிறகு சீனாவின் ஹூபே மாகாணம் இயல்பு நிலைக்கு திரும்பியது


படம் : AP
x
படம் : AP
தினத்தந்தி 26 March 2020 3:21 AM GMT (Updated: 26 March 2020 3:21 AM GMT)

கொரோனா பாதிப்பால் 2 மாத ஊரடங்கிற்கு பிறகு சீனாவின் ஹூபே மாகாணம் இயல்பு நிலைக்கு திரும்பியது.

உகான்

சீனாவின் கொரோனா வைரஸ் வெடிப்பின் மையமான ஹூபே மாகாணத்தில் இரண்டு மாதங்கள் ஊரடங்கு உத்தரவுக்கு பின்னர் நேற்று புதன்கிழமை இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது.அங்கு போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன, கட்டுமானம் மீண்டும் தொடங்கியது மற்றும் ஒரு முறை மூடப்பட்ட எல்லைகளில் பேருந்துகள் மற்றும் ரெயில் போக்குவர்த்து தொடங்கியது.

சீனாவுவில் செவ்வாயன்று புதிய உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் வழக்குகள் 47 ஆக குறைந்துள்ளன, அவை அனைத்தும் வீடு திரும்பிய பயணிகளாவர். ஒரு நாள் முன்பு அறிவிக்கப்பட்ட 78 தொற்றுநோய்களிலிருந்து குறைந்துவிட்டன.

சுமார் 6 கோடி  மக்கள் வசிக்கும் மத்திய மாகாணமான ஹூபே செவ்வாயன்று நள்ளிரவில் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்திருந்தது.

வெளிநாட்டில் இருந்து வந்த நோய் பாதிப்பை தடுப்பதற்கும் பொருளாதாரத்தை மறுதொடக்கம் செய்வதற்கும் கவனம் செலுத்திவருகிறது. தொற்றுநோய்க்கு எதிரான சீனாவின் ஒரு மைல்கல்லான ஹூபேயின் தலைநகர் உகானில் ஏப்ரல் 8 ஆம் தேதி ஊரடங்கு நீக்கப்படும்.

உகானில், இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கான அறிகுறிகளும் காணத்தொடங்கி உள்ளன. கட்டுமானத் திட்டங்கள் மீண்டும் தொடங்கியதால் பாதுகாப்பு முககவசங்களுடன் ஆண்கள் பணிபுரிந்து வருகின்றனர்,

ஹூபே அரசு புதன்கிழமை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களை விரைவில் வேலைக்குச் செல்லுமாறு கூறியது. ஒரு சிறந்த அழகிய தளமான வுடாங் மலைகள் பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டன.

மக்கள் நெருக்கம் அதிகரிக்கும் போது தொற்றுநோய்கள் மீண்டும் வருவதைத் தடுக்க அரசாங்கம் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என ஹூபே கட்சியின் செயலாளர் யிங் யோங் கூறினார்.

ஹூபேயில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், வெளிநாட்டிலிருந்து வரும் தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.

வெளிநாட்டிலிருந்து மாகாணத்திற்கு வரும் எவரும் பயணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தங்கள் மருத்துவ மற்றும் பயண வரலாற்றை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று ஹூபே அரசாங்கம் கூறி உள்ளது.

சீனாவின்  உறுதிப்படுத்தப்பட்ட மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 81,218 ஆகும், செவ்வாய்க்கிழமை இறுதியில் 474 வெளிநாட்டிலிருந்து வந்த  நோய்த்தொற்றுகள் உள்ளன.  சீனாவின் இறப்பு எண்ணிக்கை 3,281 ஐ எட்டியுள்ளது.

Next Story