உலக செய்திகள்

பியர்ல் ஹார்பர்-இரட்டை கோபுரம் தாக்குதலை விட வேதனையை இந்த வாரம் சந்திக்க வேண்டும் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை + "||" + US surgeon general warns of Pearl Harbor moment as Americans face hardest week

பியர்ல் ஹார்பர்-இரட்டை கோபுரம் தாக்குதலை விட வேதனையை இந்த வாரம் சந்திக்க வேண்டும் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

பியர்ல் ஹார்பர்-இரட்டை கோபுரம் தாக்குதலை விட வேதனையை இந்த வாரம் சந்திக்க வேண்டும் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
பியர்ல் ஹார்பர் தாக்குதல்,இரட்டை கோபுரம் தாக்குதலை விட வேதனை தரும் சூழ்நிலையை கொரோனாவால் இந்த வாரம் அமெரிக்கா சந்திக்க நேரிடும் என மருத்துவ நிபுணர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
நியூயார்க்

நியூயார்க் இரட்டை கோபுரம் தகர்ப்பு, ஜப்பான் படையினர் நடத்திய பியர்ல் ஹார்பர் தாக்குதல், ஆகியவற்றின் போது அமெரிக்க மக்கள் சந்தித்த துயர நிலையை மக்கள் இந்த வாரம் சந்திக்க போகிறார்கள் என்று அமெரிக்காவின் அரசின் தலைமை அறுவைசிகிச்சை நிபுணர் ஜெரோம் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸால் பல்வேறு நாடுகளும் பெரும் துயரத்தை சந்தித்து வருகின்றன. அமெரிக்கா கொரோனா தாக்குதலுக்கு மோசமான பாதிப்பை நாள்தோறும் சந்தித்து வருகிறது. அங்கு இதுவரை 336,830 மக்கள் கொரோனாவால்பாதிக்கப்பட்டுள்ளதோடு 9,618 பேர் உயிரிழந்துள்ளனர். 

நியூயோர்க் நகரில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளார்கள். இந்நிலையில் அடுத்துவரும் இரு வாரங்கள் அமெரிக்க மக்களுக்கு மோசமானதாக இருக்கும் என்பதால் வீட்டுக்குள்ளே இருக்க வேண்டும், சமூக விலக்கலை கடைபிடிக்க வேண்டும், சுத்தமாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவின் சர்ஜன் ஜெனரல் வைஸ் அட்மிரல் மருத்துவர் ஜெரோம் ஆடம்ஸ்  மக்களுக்கு மிகப்பெரிய எச்சரிக்கை விடுத்து உள்ளார்.  அவர் கூறியதாவது:-

அமெரிக்க வரலாற்றில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று மிகப்பெரிய இருண்ட சம்பவங்களை உருவாக்கப்போகிறது. இதற்குமுன் அமெரிக்கா இரு மோசமான சம்பவங்களைத்தான் வரலாற்றில் கண்டு உள்ளது.

ஜப்பானிய படையின் பியர்ல் ஹார்பர் தாக்குதல்,  செப்டம்பர் நியூயார்க் இரட்டை கோபுரம் தாக்குதல். 
ஆனால் அடுத்தவாரம் பியரல் ஹார்பர், இரட்டை கோபுரம் தாக்குதலில் மக்கள் அனுபவித்த வேதனைகளைப் போன்று அனுபவிக்கப்போகிறார்கள். 

மிகமோசமான சம்பவங்கள், அமெரிக்க மக்கள் வாழ்க்கையில் சந்தித்திராத கடினமான சம்பவங்களை எதிர்கொள்ளப்போகிறார்கள். இந்த சூழலை நம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த கொரோனா வைரஸ் வளைவு கோட்டை நாம் மட்டப்படுத்த வேண்டுமானால், அனைவரி்ன் பங்களிப்பும் அவசியமானதாகும். 

இந்த வாரம் நிச்சயம் நமக்கு மோசமான வாரமாக இருக்கும், நமது வாழ்க்கையில் சந்திராத மோசமான அனுபவங்களை சந்திப்போம். வாஷிங்டன், கலிபோர்னியா மோசமான உயிரிழப்பு இருக்கும். இதைத் தவிர்க்க அமெரிக்க மக்கள் வீ்ட்டுக்குள் இருக்கவேண்டும் என எச்சரித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. 25 நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு- இறப்பு எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்வு
கடந்த 25 நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு- இறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
2. அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு: இந்தியாவில் இருந்து தனது குடிமக்களை அனுப்ப சீனா முடிவு
கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் சீனா தனது குடிமக்களை இந்தியாவில் இருந்து அனுப்ப முடிவு செய்து உள்ளது.
3. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்
காயமுற்ற தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை அழகிய சாதனை என இவான்கா டிரம்ப் பாராட்டி உள்ளார்
4. உத்திரபிரதேசத்துக்கு பதிலாக ஒடிசாவுக்குச் சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள சிறப்பு ரெயில்
உத்திரபிரதேசத்துக்கு பதிலாக ஒடிசாவுக்குச் சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள சிறப்பு ரெயில். பரிதவிக்கும் தொழிலாளர்கள்.
5. புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது.