உலக செய்திகள்

உலகசுகாதார அமைப்பு சீனாவை சேர்ந்ததோ என்று எண்ண தோன்றுகிறது - அமெரிக்கா கோபம் + "||" + Trump Criticizes WHO And Threatens To Pull U.S. Funding

உலகசுகாதார அமைப்பு சீனாவை சேர்ந்ததோ என்று எண்ண தோன்றுகிறது - அமெரிக்கா கோபம்

உலகசுகாதார அமைப்பு சீனாவை சேர்ந்ததோ என்று எண்ண தோன்றுகிறது - அமெரிக்கா கோபம்
இனி நிதி கிடையாது; உலகசுகாதார அமைப்பு சீனாவை சேர்ந்ததோ என்று எண்ண தோன்றுகிறது டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார்.
வாஷிங்டன்

அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி, கொரோனா  வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,837 ஆக உள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் ஏறத்தாழ 2 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் பலியாகியுள்ளனர். அதேபோல், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது.  

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், உலக சுகாதார நிறுவனத்திற்கு அளிக்கப்படும் நிதி இடைநிறுத்தக்கூடும் என்று அச்சுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து தினந்தோறும் பேசி வரும் டிரம்ப், இன்று வெள்ளை மாளிகையில், உலக சுகாதார அமைப்பின் மீது இருக்கும் கோபத்தை மீண்டும் வெளிப்படுத்தினார்.அவர், சீனாவை மையமாகக் கொண்டவையோ என்று தோன்றுகிறது. கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு பதிலளிப்பதில் ஒரு பயனும் இல்லை என்று கோபமாக கூறினார்.மேலும், அவர் உலகசுகாதார அமைப்பு அமெரிக்காவிடமிருந்து ஏராளமான பணத்தைப் பெறுகிறது. அவர்களுக்கான பணத்தின் பெரும்பகுதியை அமெரிக்கா செலுத்துகிறது. ஆனால் அந்த 
சீனாவை மையமாக கொண்டதோ என்று நினைக்க தோன்றுகிறது.என்று குற்றம் சாட்டினார்.

கொரோனா வைரஸ் அவர்கள் அறிந்திருக்க வேண்டும், நிறைய தகவல்கள் அவர்களிடம் இருந்தன. அறிந்திருக்கலாம், ஆனால் இதன் காரணமாக, இனி உலக சுகாதர அமைப்பிற்கு செலவழித்த பணத்தை நாங்கள் பிடிக்கப் போகிறோம் என்று கூறியுள்ளார். இதனால் உலகசுகாதார அமைப்பிற்கு மிகப் பெரிய நன்கொடையாளரின் பங்களிப்பு நிறுத்தக் கூடும் என்று கூறப்படுகிறது.

சீனா தங்கள் நாட்டில் கொரோனா வைரஸால் தங்கள் நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,300-க்கும் என்று கூறுகிறது. ஆனால் அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் சீனாவில், உண்மையான இறப்பு எண்ணிக்கை 40,000 க்கும் அதிகம் என்று கூறுகிறது.

கடந்த ஜனவரி மாதம், உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மைக்கேல் ரியான், கொரோனா வைரஸைப் பற்றி சீனா சரியானதைச் செய்கிறது என்று கூறியிருந்தார், இப்போது வெளிப்படையான வெளிப்படைத்தன்மை இல்லாததை இப்போது நாங்கள் கண்டிருக்கிறோம் என்று கூறியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவை விட சக்தி வாய்ந்த பல வைரஸ்கள் நம்மை தாக்க கூடும் - வவ்வால் பெண்மணி எச்சரிக்கை
கொரோனாவை விட சக்தி வாய்ந்த பல வைரஸ்கள் நம்மை தாக்க கூடும் என வவ்வால் பெண்மணி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
2. 25 நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு- இறப்பு எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்வு
கடந்த 25 நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு- இறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
3. அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு: இந்தியாவில் இருந்து தனது குடிமக்களை அனுப்ப சீனா முடிவு
கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் சீனா தனது குடிமக்களை இந்தியாவில் இருந்து அனுப்ப முடிவு செய்து உள்ளது.
4. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்
காயமுற்ற தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை அழகிய சாதனை என இவான்கா டிரம்ப் பாராட்டி உள்ளார்
5. உத்திரபிரதேசத்துக்கு பதிலாக ஒடிசாவுக்குச் சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள சிறப்பு ரெயில்
உத்திரபிரதேசத்துக்கு பதிலாக ஒடிசாவுக்குச் சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள சிறப்பு ரெயில். பரிதவிக்கும் தொழிலாளர்கள்.